டில்லியில் கடும் காற்றுமாசு: இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛டில்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக மக்கள் மூச்சு விடமுடியாமல் தவிக்கின்றனர். இதற்கு டில்லி அரசு, மக்களுக்கு இழப்பீடும், மருத்துவக் காப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்,'' என டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் கருதி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டில்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் காற்று மாசுபாடு நிலவுகிறது. ஹரியானா, பஞ்சாப்,
Heavy, Air Pollution, Delhi, Petition, High Court, Seeking, Compensation, டில்லி, கடும் காற்றுமாசுபாடு, மக்கள் பாதிப்பு, இழப்பீடு, ஐகோர்ட், மனுத்தாக்கல்,

புதுடில்லி: ‛‛டில்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக மக்கள் மூச்சு விடமுடியாமல் தவிக்கின்றனர். இதற்கு டில்லி அரசு, மக்களுக்கு இழப்பீடும், மருத்துவக் காப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்,'' என டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் கருதி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் காற்று மாசுபாடு நிலவுகிறது. ஹரியானா, பஞ்சாப், உ.பி., மேற்குப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதாலும், வாகனங்களின் கடும் புகை, கட்டடப்பணிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் காற்று மாசு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



டில்லியில் காற்றுமாசுபாடு மிகமோசமான நிலையில்தான் தொடர்ந்து நிலவுகிறது. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையும், தேவைப்பட்டால் லாக்டவுன் கொண்டுவரவும் தயாராக இருப்பதாக டில்லி அரசு தெரிவித்துள்ளது. டில்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், விரைவில் காற்று மாசுக்கு தீர்வுகாணக் கோரி டில்லி அரசுக்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வக்கீல் ஷிவம் பாண்டே டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவித்ததாவது: பல்வேறு நோய்களுக்கும் காற்றுமாசு தான் மூலக் காரணம், மனிதர்களின் உடல்நலனை வெகுவாகப் பாதிக்கிறது. குறிப்பாக, காற்றுமாசு மனித உடல்நிலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.


latest tamil news


தலைவலி, கண் எரிச்சல், தோல் எரிச்சல், நுரையீரல் நோய்கள் போன்றவற்றை காற்றுமாசு தான் ஏற்படுத்துகிறது. நுரையீரலில் ஏற்படும் பலநோய்களுக்கு காற்று மாசுபாடு முக்கியக் காரணமாகி பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.

சுபாஷ் குமார் என்பவர் பீஹார் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், ‛‛அரசியலமைப்புச்சட்டம் பிரிவு21ன்படி, மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான சூழல் இருப்பது அடிப்படை உரிமை என்றும், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்,'' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுபோன்று டில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரிதும் துன்பப்படுகிறார்கள். இதற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கிட டில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பொதுநல மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
01-டிச-202117:28:32 IST Report Abuse
J.Isaac மாசு அதிகமாகிறதற்கு பட்டாசு தான் காரணம் என்று அதை தடை பண்ணினார்களே. கிட்டத்தட்ட ஏழு லட்சம் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஒரு அறிக்கை கூறுகிறது. பாராளுமன்றத்தை மத்திய இந்தியாவிற்கு மாற்றினால் மாசு குறையும்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
01-டிச-202114:47:59 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் "வக்கீல் ஷிவம் பாண்டே டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்" டில்லியில் எத்தனையோ வகுப்புவாரியா மக்கள் இருந்தாலும் இந்த ரெண்டு பர்சண்ட்ட்டு இருக்குறவன்தான் பொதுநல மனு போடுறான்
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் தில்லி யில் பாஜக ஆட்சி செய்தால் சரியாகி விடுமா நாட்டின் தலை நகரை ஜம்முவிற்கு மாற்றிவிடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X