அமெரிக்க பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளியில், 15 வயதான மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.மிச்சிகன் மாகாணத்தில் உள்ள சிறிய நகரமான ஆக்ஸ்போர்டில் உள்ள உயர்நிலை பள்ளியில், 15 வயதான சிறுவன், மறைத்து வைத்திருந்த செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி மூலம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயதான மாணவன் மற்றும் 14, 17 வயதுடைய மாணவிகள்
Tragic, US Student,Opens Fire, High School, 3 Teens Die

வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளியில், 15 வயதான மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

மிச்சிகன் மாகாணத்தில் உள்ள சிறிய நகரமான ஆக்ஸ்போர்டில் உள்ள உயர்நிலை பள்ளியில், 15 வயதான சிறுவன், மறைத்து வைத்திருந்த செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி மூலம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயதான மாணவன் மற்றும் 14, 17 வயதுடைய மாணவிகள் உயிரிழந்தனர். ஆசிரியர் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மற்றவர்களது நிலைமை சீராக உள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் மாணவன் சரணடைந்தான். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து தெரியவில்லை.


latest tamil news

பைடன் அதிர்ச்சிதுப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் பைடன், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
02-டிச-202100:11:28 IST Report Abuse
Nagar பிரிட்டிஷ் திருடர்களும் போர்த்துகீஸ் கொள்ளையர்களும் இந்தியாவை கொள்ளை அடித்ததுபோல் - ஸ்பெயின் மற்றும் பிரிட்டிஷ் கொள்ளையர்கள் பத்து கோடி அமெரிக்க செவ்விந்தியர்களை இரக்கமின்றி கொன்று உருவான நாடு தான் இன்றைய அமெரிக்கா. கொடூரத்தில் உருவான அமெரிக்கா இன்று அதே கொடூரத்தில் அழிந்து வருகிறது.இன்று அமெரிக்க நாடு கொஞ்சமாவது உறுப்படுகிறது என்றால் அதற்க்கு காரணம் அங்குள்ள நம் இந்தியர்களே.
Rate this:
Cancel
Brahamanapalle murthy - Bangalore,இந்தியா
01-டிச-202117:29:22 IST Report Abuse
Brahamanapalle murthy Once again the gun culture has surfaced leading to untimely death of youth. How many such incidents USA will allow to happen. When they are going act firm? So many Presidents have come and again but such incidents has not been prevented
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
01-டிச-202114:57:40 IST Report Abuse
தமிழன் துப்பாக்கி மூலமாகவே உருவாக்கப்பட்ட நாடு அது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X