12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் விவகாரம்; பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபாவில் 12 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பார்லி வளாகத்தில் காங்கிரஸ், திரிணமுல் காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது ராஜ்யசபாவில் ரகளையில் ஈடுபட்டு, மேஜைகள் மீது ஏறி கோஷமிட்ட திரிணமுல் காங்., சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட் கட்சிகளின் 12 எம்.பி.,க்களை, நடப்பு கூட்டத் தொடர்
Parliament, RajyaSabha, MPs, Suspension, Protest, Opposition Parties, பார்லிமென்ட், ராஜ்யசபா, எம்பிக்கள், சஸ்பெண்ட், போராட்டம்

புதுடில்லி: ராஜ்யசபாவில் 12 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பார்லி வளாகத்தில் காங்கிரஸ், திரிணமுல் காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது ராஜ்யசபாவில் ரகளையில் ஈடுபட்டு, மேஜைகள் மீது ஏறி கோஷமிட்ட திரிணமுல் காங்., சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட் கட்சிகளின் 12 எம்.பி.,க்களை, நடப்பு கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து சபை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இதனை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. கூட்டத்தொடரின் 3வது நாளான இன்றும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news


பின்னர் பார்லி வளாகத்தில் கோஷங்கள் எழுப்பி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இது தொடர்பாக ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்., மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், '12 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என கோருகிறோம். இதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்,' என்றார்.

காங்., மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், 'இந்த நாட்டில் அனைவரின் குரல்களும் கேட்கத் தகுதியானவை என்பதை மத்திய அரசு உணர வேண்டும். பார்லிமென்ட் என்பது விவாதம் மற்றும் கலந்துரையாடுவதற்கான இடம். மக்களின் கருத்துக்களை தெரிவிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் பார்லிமென்ட்டை உண்மையாக நடத்த முடியும்,' எனக் கூறினார்.


latest tamil news


தொடர்ந்து பார்லி வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்களில் ஒருவரான தோலா சென் (திரிணமுல் காங்.,) கூறியதாவது: எம்.பி.,க்கள் இடைநீக்கமானது மெஜாரிட்டியாக இருப்பவர்களின் ஆணவத்தை காட்டுகிறது. மக்களின் குரல்களை பார்லி.,யில் எழுப்புவது எங்கள் கடமை. மக்கள் குரலை ஒலித்ததற்கு தண்டித்துள்ளனர். நாங்கள் மக்களுக்காக, விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம். ஆனால், அவர்கள் அதற்கு எதிரானவர்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பார்லி நடவடிக்கைகளை சீர்குலைத்து வந்தனர். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தர்ணா போராட்டத்தை தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
01-டிச-202119:13:36 IST Report Abuse
Godyes இவனுங்கள்ளாம் அடி முட்டாளுங்க.நாயுடுகாரு நல்லாவே சொன்னாருங்க இவர்களுக்கு ஓட்டு போட்டவனுங்க அதை விட அடி முட்டாளுங்க. எப்பவுமே தேர்தலில் நிற்க கூடாதுன்னு. சட்டம் சொல்லுமுங்க.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-டிச-202118:13:02 IST Report Abuse
vbs manian மேஜை மேல் ஏறி குதிப்பது மைக்கை பிடிங்கி எறிவது அவை அதிகாரிகளை மிரட்டுவது தள்ளு முள்ளு எல்லாம் மக்களுக்காக போராடுவதா.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-டிச-202118:10:32 IST Report Abuse
vbs manian காந்தியை தொடர்ந்து அவமதிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X