பொது செய்தி

இந்தியா

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: பெட்ரோல் மீதான வாட் வரியை டில்லி மாநில அரசு குறைத்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அதன் விலை லிட்டருக்கு ரூ.8 குறைகிறது.கடந்த நவ.,4ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. மத்திய அரசை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகள் வரிகளை குறைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப
delhi, petrol, price, reduced,

புதுடில்லி: பெட்ரோல் மீதான வாட் வரியை டில்லி மாநில அரசு குறைத்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அதன் விலை லிட்டருக்கு ரூ.8 குறைகிறது.

கடந்த நவ.,4ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. மத்திய அரசை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகள் வரிகளை குறைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் நிலையில், கடந்த 27 நாட்களாக, அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், டில்லி மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 19.40 சதவீதமாக குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைகிறது. இந்த உத்தரவு இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முடிவு முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தற்போது டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.97 க்கு விற்கப்படும் நிலையில், நள்ளிரவு முதல் அதன் விலை ரூ.95.97 ஆக குறையும்.
டீசல் விலை ரூ.86.67 க்கு விற்கப்படுகிறது.


வணிக பயன்பாட்டிற்கான காஸ் விலை உயர்வு




latest tamil news



அதேநேரத்தில், வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது இன்று(டிச.,1) முதல் அமலுக்கு வருகிறது. 19 கிலோ எடை கொண்ட இந்த காஸ் விலை உயர்வு காரணமாக, அதன் விலை டில்லியில் ரூ.2,101க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202104:01:24 IST Report Abuse
J.V. Iyer தமிழ்நாட்டிற்கு எப்போது விடிவுகாலம் வரும்? அதற்கென்ன? மத்திய அரசை குறைகூறிவிட்டு மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வோட்டளிப்போம். சீக்கிரம் எல்லோரும் நீச்சல் கற்றுக்கொள்வோம். தலைவர்கள் நடந்து வந்துபோக பத்து மீட்டர் உயரத்தில் நாற்காலிகளை அமைப்போம். இனி குளத்தூரில் குளம் என்ற பெயரே இருக்கக்கூடாது. பெயரை மாற்றுவோம். சரியா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-டிச-202118:53:19 IST Report Abuse
J.V. Iyer தமிழ்நாட்டில் வாய் சவடால் பேர்வழிகள்தான் அதிகம். விடியா மூஞ்சி ஒன்றீய மாநில அரசு.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
01-டிச-202115:19:13 IST Report Abuse
INDIAN Kumar பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 28% வரி விதித்து மத்திய அரசு அதிரடி பண்ண வேண்டும் , நீ பாதி நான் பாதி ஆளுக்கு பதி நான்கு
Rate this:
selva - Chennai,இந்தியா
01-டிச-202119:14:17 IST Report Abuse
selva//INDIAN Kumar - Chennai,இந்தியா// பகல் கனவு.. எல்லோருக்கும் உரிமை உண்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X