பொது செய்தி

இந்தியா

நவ., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.31 லட்சம் கோடி

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.31 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:நவம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி.,யில் ரூ.1,31,526 கோடியில்,சிஜிஎஸ்டி - 23,978 கோடிஎஸ்ஜிஎஸ்டி ரூ.31,127 கோடிஐஜிஎஸ்டி-ரூ.66,815 கோடி( இறக்குமதி பொருள் மூலம் கிடைத்த வரி
GST, mop up, Nov, Rs 1.31 lakh cr, second highest, rollout, ஜிஎஸ்டி, வசூல்,

புதுடில்லி: நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.31 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

நவம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி.,யில் ரூ.1,31,526 கோடியில்,

சிஜிஎஸ்டி - 23,978 கோடி

எஸ்ஜிஎஸ்டி ரூ.31,127 கோடி

ஐஜிஎஸ்டி-ரூ.66,815 கோடி( இறக்குமதி பொருள் மூலம் கிடைத்த வரி ரூ.32,165 கோடியும் அடக்கம்)

செஸ்- ரூ.9,606 கோடி( பொருள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.653 கோடியும் அடக்கம்)


latest tamil news
2017 ஜூலையில் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பிறகு, வசூலான தொகைகளில் கடந்த நவம்பரில் வசூலான தொகை தான் 2வது மிகப்பெரிய வசூல் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலானது தான் மிகப்பெரிய தொகை.
மேலும் ரூ.1.31 லட்சம் கோடி வசூலானது கடந்த 2020 நவ., வசூலான தொகையை காட்டிலும் 20 சதவீதமும், 2019

நவ.,வசூலான தொகையை காட்டிலும் 27 சதவீதமும் அதிகம் ஆகும். அக்டோபரில் ரூ.1.30 லட்சம் கோடி வசூலான நிலையில், இந்த மாதம் வசூல் அதிகரித்தது, பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
01-டிச-202119:00:01 IST Report Abuse
Suri இந்த வருவாய் எந்த எந்த பொருளின் மீது அதிகமாக கிடைத்தது என்ற விளக்கம்( breakup ) கொடுப்பார்களேயானால் சங்கிகளின் பிம்பம் சுக்கு நூறாக உடைந்துவிடும். இவர்களின் வரி மேலாண்மை லட்சணம் சந்திசிரித்துவிடும்.
Rate this:
பாலா - chennai,இந்தியா
01-டிச-202119:36:32 IST Report Abuse
பாலாநமக்கு எல்லாமே ஓசியில வேனும் அதுவும் தரமா வேனும் உதாரணத்துக்கு சிலபல ஆயிரம் கோடி கொரோணா ஊசிக்கு அரசு செலவு செஞ்சிருக்கு அந்த மருந்துக்கு யாரு காசு குடுப்பா (ஒரு வேள சந்திரமண்டலத்துல வசிக்கற வேற்று கிரக வாசிகள் பரிதாபட்டு குடுப்பாங்களே ??) இது இரு வகை யவாரம் தான் யவார உலகத்துல ஒரு சொல் உண்டு "when something is given free you are the product" இத சரியா புரிஞ்சுகிட்டா நாம இம்புட்டு குழம்ப வேண்டாம்...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-டிச-202118:58:35 IST Report Abuse
Rasheel சென்னையில் இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் GST ஏமாற்று வேலைக்காக வருமான வரி சோதனை இன்று நடக்கிறது. ஒவ்வரு சாலை அமைப்பதிலும் 40% மத்திய அரசின் பணம் செல்கிறது. மத்திய அரசின் மொத்த வருமானத்தில் 30% அரசாங்க ஊழியர் சம்பளமாக செல்கிறது. 2010ம் ஆண்டில் 90000 கோடியாக இருந்த மத்திய அரசு ஊழியர் சம்பளம் இப்போது 2.50 லக்ஷம் கோடியாக செலவாகிறது., நாடு ராணுவ பாதுகாப்புக்கு 5 லக்ஷம் கோடி செலவாகிறது. ரெஷன்களில் குறைந்த விலைக்கு அரிசி கோதுமை வழங்க 1.50 லக்ஷம் கோடிக்கு மேல் செலவாகிறது. எனவே GST ஏமாற்று வேலை இந்த நாட்டை ஏமாற்றுவதாகும்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
01-டிச-202118:57:10 IST Report Abuse
Suri வரி செலுத்தும் வல்லமை அதிகம் கொண்டவரிடம் அதிக வரி வசூலிப்பதும் குறைந்த சக்தி கொண்டவரிடம் குறைவான வரி வசூலிப்பதே சிறந்த அரசின் கொள்கையாக இருக்கவேண்டும். ஆனால் இங்கு நடப்பது கார்பொரேட் முதலாளிகளின் ஆட்சி. பணக்காரர்கள் வரிசையில் எங்கோ இருந்த அதானி இப்போது அம்பானியை முந்துகிறார் என்றல் இந்த அரசின் இப்படிப்பட்ட கொள்கை மட்டுமே காரணம். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக்குவது. அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்களாக வாங்கி குவிப்பது. தனி நபர் பிம்பத்த வளர்க்க அதை உபயோகப்படுத்துவது மட்டுமே இங்கு நடக்கிறது. முன்னேறிய வகுப்பினரின் நலனில் மட்டும் அதீத அக்கறை செலுத்துவது. மற்றவர்களுக்கு பட்டை நாமம் சாத்துவது. இது நீண்ட காலம் நீடிக்காது.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
01-டிச-202120:15:12 IST Report Abuse
elakkumananதம்பி, அந்த ஐநூறு கோடி மான நஷ்ட ஈடு பயபுள்ளய கண்டுபிடிசீங்களா? அம்பானியை அதானி முந்துகிறார் என்றால் ஏதோ காரணம் சொல்கிறீர்.............ஆனால், ஒரு ரயில் டிக்கெட் எடுக்க முடியாதவன் ஏரோபிளான் கம்பெனி நடத்துவது, அம்பது சானல் நடத்துவதெல்லாம் ...........ரஜினி படத்தில் கூட (ஒரே பாட்டில் ஹீரோ உசரம் போயிடுவார் ) டாஸ்மாக்கான் பார்க்காதது தம்பி.....அந்த விஷயத்தையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்க.....முப்பது வயசுல, ரஜினி கமலை வச்சு படம் எடுக்கணும்னா, என்ன விதமான உழைப்பு தேவை ன்னு ஒரு ஆராய்ச்சி போடுங்க தம்பி.........எங்க மர மண்டைகளுக்கு புரியட்டும் தம்பி..................இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் சி இ ஓ நம்ம ஊரு குடிசை தொழில் அதிபர் தான் ன்னு தெரியுமா தம்பி...............என்னவோ போங்க..சமசீர் விளைவு இப்பிடி ஆகிப்போச்சே.....
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
02-டிச-202114:57:06 IST Report Abuse
Rasheelஅதானி அம்பானியை முந்தி தென் இந்தியாவில் பலபேர் இருக்கின்றனர். என்ன வெளியில் தெரியாமல் வெளிநாட்டில் அறிவியல் பூர்வமாக வைத்து இருக்கிறான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X