வேலூர்: ''முல்லை பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீரை நிரப்ப முடியாது என, கேரள அரசு தெரிவித்திருந்த நிலையில், நான்காவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், டெண்டர் விடப்பட்ட காலத்திலேயே முடித்திருக்க வேண்டும். தற்போது, 70 சதவீதம் பணிகள் மட்டுமே நடந்துள்ளன. இந்த வேலையை எடுத்த தனியார் ஒப்பந்ததாரர்கள், தாங்களே முன் நின்று வேலைகளை செய்யாமல், துணை ஒப்பந்ததாரர்களை நியமித்ததால், பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை கடந்த ஆட்சியாளர்கள் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் செய்யவில்லை. வேலூரில், பாதாள சாக்கடை முறையாக செயல்படுத்தவில்லை. தெருக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் உடனடியாக இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரும், 12ல், மீண்டும் ஆய்வு செய்ய இருக்கிறேன், அதற்குள் பணிகளை முடிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீரை நிரப்ப முடியாது என, கேரள அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE