வேலூர்: வேலூர் அருகே, பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற, 13 மாணவர்கள் தடுப்புகளில் மோதி படுகாயமடைந்தனர்.
வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு நேற்று காலை, 9:00 மணிக்கு, ஏ.ஏ.ஏ. என்ற தனியார் பஸ் சென்றது. பஸ்சில் அதிகளவு பயணிகள் இருந்ததால், மேல்விஷாரம் செல்ல வேண்டிய மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர். வேலூர் அருகே பெருமுகையில் சென்ற போது, பைக் ஒன்றை முந்திச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையை ஒட்டியுள்ள இரும்பு தடுப்புகள் மீது மோதி, 50 மீட்டர் உராய்ந்தபடி சென்றது. இதில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற வேலூரை சேர்ந்த ரகோத்துமன், 19, சங்கரன், 20, உள்பட, 13 மாணவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்ல, மாணவர்களை அனுமதித்த கண்டக்டர் செல்வகணபதி, 45, மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement