பொது செய்தி

தமிழ்நாடு

12 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: ‛‛கொரோனா தொற்று குறைந்துள்ளதால் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைக்கப்படும். இதில் வரும் 3ம் தேதி முதல் மக்கள் பயணிக்கலாம்,'' என்று தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன.
Unreserved, Boxes, 12 Express, Trains, Link, Southern Railway, 12 எக்ஸ்பிரஸ், ரயில்கள், முன்பதிவு, இல்லாத பெட்டிகள், இணைப்பு, தெற்கு ரயில்வே,

சென்னை: ‛‛கொரோனா தொற்று குறைந்துள்ளதால் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைக்கப்படும். இதில் வரும் 3ம் தேதி முதல் மக்கள் பயணிக்கலாம்,'' என்று தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


latest tamil news



கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்கள் வரும் 3 ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த ரயில்கள் விபரம் வருமாறு:

* சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.
* பெங்களூரு பிருந்தாவன் - சென்ட்ரல்.
* சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ்.
* கோவை - சென்ட்ரல் இண்டர்சிட்டி.
* விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்.
* திருப்பதி - விழுப்புரம்.
* சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்.
* திருப்பதி - சென்ட்ரல்.
* சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்
* திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் - சென்ட்ரல்.
* மங்களூரு சென்ட்ரல் - மட்கான் பாசஞ்சர்.
* மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர்.
இந்த 12 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு 2ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATESAN - KRISHNAGIRI,இந்தியா
02-டிச-202122:05:01 IST Report Abuse
VENKATESAN இன்னும் 56845 & 56111 ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் இரயில் இயக்கப்படவில்லை. அதேப்போல் 56112, 56846ஈரோடு - ஜோலார்பேட்டை வண்டியும் இயக்க வில்லை...
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் மங்களூரு சென்ட்ரல் - மட்கான் பாசஞ்சர்.இது மட்டுமே பாசஞ்சர் ஏனென்றால் அது கர்நாடகா கோவா எனும் பிஜேபி ஆளும் மாநில மக்களுக்கானது ஆனால் விழுப்புரம் திருப்பதி சென்னை திருப்பதி போன்ற திருப்பதி சென்று மொட்டை போடும் ஏழைகளுக்கான ரயில்களும் தமிழ்நாட்டுன்னாலே எல்லாமே சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்தான் கட்டணக்கொள்ளை கோவிந்தா கோவிந்தா அண்ணாமலைக்கு அரோகரா
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
01-டிச-202115:15:42 IST Report Abuse
INDIAN Kumar சென்னை மட்டும் தான் தமிழ்நாடு என்று நினைத்து விட்டார்கள் தமிழ்நாட்டின் தலை வீங்கி இருக்கிறது மற்ற பகுதிகளும் வளர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X