பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கமல்ஹாசன்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினார். பின்னர், அவருக்கு லேசான இருமல் இருந்ததை அடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில், கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து
Kamalhaasan, Covid, Fully Recovered, Corona, கமல்ஹாசன், கோவிட், கொரோனா, குணம்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினார். பின்னர், அவருக்கு லேசான இருமல் இருந்ததை அடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில், கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார்.


latest tamil news


இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், 'நவ.,22ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொண்டையில் லேசான தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். டிச.,3ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். டிச.,4ம் தேதி முதல் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்,' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
02-டிச-202104:24:46 IST Report Abuse
meenakshisundaram தம்பி கமல் ,அண்ணனை பாரு .சமத்தா விலகிட்டான் -இது தான் சரியான நேரம் ,கொஞ்சம் அரசியலை விட்டு வெளியே வந்துடுங்க ,ஆண்டவனா பார்த்து சந்தர்ப்பம் கொடுத்திருக்கான் .
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
01-டிச-202123:02:53 IST Report Abuse
Paraman அதாகப்பட்டது மக்களே, கொரநா, கமலஹாசனிடமிருந்து மீண்டது என்று படிக்கவும் கொரானாவிற்கே எப்புடி கொரானா வரும்?? அது இந்த ரெண்டுகெட்டான் தெலுங்கு வந்தேறி ஊழல் கும்பல்களின் 'பகுத்தறிவின்(??)'படி கொரானாவை, கமல்ஹாசன் தான் இத்தனை நாள் வெச்சிருந்தார் இப்போது உலக்கையின் தொற்றில் இருந்து கொரானா மீண்டது
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
01-டிச-202122:24:57 IST Report Abuse
r ravichandran நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X