பொது செய்தி

தமிழ்நாடு

'தல' வேண்டாம்...'ஏகே' கூட 'ஓகே': நடிகர் அஜித் திடீர் வேண்டுகோள்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை : நடிகர் அஜித்குமார் தன்னை ‛தல' என அழைக்க வேண்டாம், அஜித் குமார், அஜித் அல்லது ‛ஏகே' என்று கூட குறிப்பிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் ஏற்கனவே ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்துவிட்டார். ரசிகர்கள் அவரவர் வேலையை பாருங்கள் என அறிவித்திருந்தார். அதோடு தன்னை அல்டிமேட்
Ajithkumar, Ajith, Thala, ThalaAjith, அஜித்குமார், அஜித், தல,

சென்னை : நடிகர் அஜித்குமார் தன்னை ‛தல' என அழைக்க வேண்டாம், அஜித் குமார், அஜித் அல்லது ‛ஏகே' என்று கூட குறிப்பிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் ஏற்கனவே ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்துவிட்டார். ரசிகர்கள் அவரவர் வேலையை பாருங்கள் என அறிவித்திருந்தார். அதோடு தன்னை அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து அழைத்தபோது அப்படி அழைக்க வேண்டாம் என அறிவித்தார். மேலும் தன்னுடைய படங்களிலும் அஜித் குமார் என்றே தனது பெயர் வரும்படி பார்த்துக் கொண்டார். இருப்பினும் ரசிகர்கள் இவரை ‛தல தல' என்று தான் அழைத்து வந்தனர். தன் ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும் அவருக்கென்று ஒரு தனிக்கூட்டம் உள்ளது. அதிலும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியாது. சமயங்களில் எல்லை மீறிய சண்டைகள் கூட நடந்தேறி உள்ளது.


latest tamil news



இந்நிலையில் திடீரென நடிகர் அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதில், ‛‛மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு... இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், அஜித் அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அஜித் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-202122:23:25 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் டோனியை பற்றி "தமிழ்நாட்டுக்கு ஒரே தலை தாண்" என்ற ஒரு சில நடிகர்களின் கருத்து அவரை காயப்படுத்தியிருக்க வேண்டும் அதன் வெளிப்பாடே இந்த முடிவு
Rate this:
Cancel
01-டிச-202123:49:08 IST Report Abuse
தல தளபதி இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-டிச-202122:34:23 IST Report Abuse
Vijay D Ratnam தல என்ற பெயர் அஜித் ரசிகர்களையும் தாண்டி இந்திய சினிமாவால் கொண்டாடப்படுகிறது. அதுபாட்டுக்கு இருந்துட்டு போவட்டும் தல. அலட்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்பது கூட நன்றாகத்தான் இருந்தது. அதையும் தவிர்த்துவிட்டீர்கள். இங்கே சினிமாவுக்கு அப்பனால் இறக்கிவிடப்படும் போதே பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டுகிறது. தங்களுக்கு தாங்களே வைத்துக் கொண்டு பில்டப் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இங்கே நிறைய ஏகே இருக்கிறார்கள் அமீர்கான், அக்ஷய்குமார், அனில்கபூர், அனுராக் காஷ்யப் என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X