பொது செய்தி

இந்தியா

தனியார் மூலம் பயணிகள் ரயில் இயக்குவதற்கான ஏலம் ரத்து: ரயில்வே அமைச்சகம்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.'பாரத் கவுரவ்' என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சுற்றுலாவுக்கு என பிரத்யேகமாக தனிப் பிரிவை துவக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்களைத்
Railway Ministry, Scraps, Private Bids, Passenger Trains, தனியார், ரயில், ஏலம், ரத்து, ரயில்வே அமைச்சகம்

புதுடில்லி: தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

'பாரத் கவுரவ்' என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சுற்றுலாவுக்கு என பிரத்யேகமாக தனிப் பிரிவை துவக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்களைத் தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. அவற்றில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டில்லி, கோல்கட்டா, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்கள், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 13 ரயில்களைத் தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.


latest tamil news


இதில் ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளன. கடந்தாண்டு 16 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியிருந்த நிலையில் தற்போது நிறுவனங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இதனையடுத்து தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக லோக்சபாவில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜன-202218:13:37 IST Report Abuse
Bhaskaran ரயில்வே தொலைத்தொடர்பூ ,அஞ்சல் போன்றவைகள் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்வதர்காக தொடங்கப்பட்ட அமைப்புகள் .அஞ்சல் துறையை கிட்டத்தட்ட ஒழிச்சாச்சு தனியார் கொரியர் நிறுவனங்களை வளர்த்தாச்சு .தொலைத்தொடர்பை தனியாருக்கு தாரைவார்த்தாச்சு இனி இருப்பது ரயில்வே மட்டும்தான் பிரதமரும் நிதியமைச்சரும் இம்முறை பதவி காலம் முடிவதற்குள் தனியார் கிட்டே கொடுத்துடுவாங்க .மற்றபடி லாபம் தந்த நவரத்தின நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்துடுவாங்க .சாமானியன் ரயிலில் போகமுடியாது
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
02-டிச-202100:40:25 IST Report Abuse
John Miller லஞ்சம் அதிகமாக கேட்டு இருப்பார்கள்.
Rate this:
Cancel
Venkat Subbarao - Chennai,இந்தியா
01-டிச-202119:43:14 IST Report Abuse
Venkat Subbarao இதுபோல் யாரும் கலந்துகொள்ளவில்லை எனில் தானாகவே ரத்து செய்துவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X