பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமான போக்குவரத்து சேவை துவங்குவது தள்ளிப்போகுது

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, டிச.,15ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சேவை துவங்குவது என்ற முடிவை மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) ஒத்தி வைத்தது. மீண்டும் துவங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.கோவிட் பரவல் காரணமாக இந்தியாவில், கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து, வரும் டிச.,15ம் தேதி முதல்
சர்வதேச விமான போக்குவரத்து, தள்ளிப்போனது, டிஜிசிஏ. dgca, international flights,

புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, டிச.,15ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சேவை துவங்குவது என்ற முடிவை மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) ஒத்தி வைத்தது. மீண்டும் துவங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.

கோவிட் பரவல் காரணமாக இந்தியாவில், கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து, வரும் டிச.,15ம் தேதி முதல் துவங்கும் என டிஜிசிஏ அறிவித்தது. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கோவிட் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஒமைக்ரான்' என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், அச்சுறுத்தல் மிக்கது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதால், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தது. அதேபோல், இந்தியாவும் தடை விதிக்க வேண்டும் எனவும், டிச.,15ம் தேதி துவங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் பலரும் மத்திய அரசை வலியுறுத்தினர்.


latest tamil news


ஒமிக்ரான் எஃபெக்ட் சர்வதேச விமான சேவை 15ல் தொடங்காது ......



இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைத்து, டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ஒமைக்ரான் வைரஸ் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அனைத்து துறையினருடன் ஆலோசனை அடிப்படையில் நிலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் எப்போது துவங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202105:38:32 IST Report Abuse
Bhaskaran அதனாலென்ன அப்புறம் இந்த நஷ்டத்தையும் வட்டியுடன் சேர்த்து அப்பாவி பயணிகள் தலையில் சுமாத்திட்டா போகுது .நம்ம அதிகாரிகளுகா யோசனை தெரியாது இந்திய அதிகாரவர்க்கம்னா சும்மாவா கோவிட்டில் ஏழைகளுக்கு பத்துபைசா கூட உதவிசெய்யாத நிதியமைச்சரை கொண்டுள்ள பெருமைபடைத்த நாடல்லவா இந்தியா
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-டிச-202102:52:46 IST Report Abuse
Ramesh Sargam மீண்டும் விமான சேவை நிறுவனங்களுக்கு பிரச்சினை. நஷ்டம்.
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
01-டிச-202122:08:30 IST Report Abuse
ديفيد رافائيل Scientific name ஐ தான் corona க்கு வச்சுருக்கானுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X