பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவு!

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.4,000 செலுத்தி துரித பி.சி.ஆர்., பரிசோதனை மூலம் அரை மணி நேரத்தில் முடிவுகளைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமைக்ரான் வைரஸால் இந்தியாவில் இன்று (டிச.,1) முதல் புதிய விதிகள் அமலாகின்றன. ஒமைக்ரான் வகை இந்தியாவில் இதுவரை
Test results, Chennai, Airport, 30 minutes, சென்னை, விமான நிலையம், 30 நிமிடம், பரிசோதனை, முடிவுகள்,

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.4,000 செலுத்தி துரித பி.சி.ஆர்., பரிசோதனை மூலம் அரை மணி நேரத்தில் முடிவுகளைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.


latest tamil news


தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமைக்ரான் வைரஸால் இந்தியாவில் இன்று (டிச.,1) முதல் புதிய விதிகள் அமலாகின்றன. ஒமைக்ரான் வகை இந்தியாவில் இதுவரை பதிவாகவில்லை. அதன் பாதிப்பு உள்ள ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்.


latest tamil news


சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 40 சர்வதேச விமானங்கள் வருகை தருகின்றன. காத்திருப்பு அரங்கில் நாள்தோறும் 700 பயணிகள் வரை தங்கலாம். நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சிகிச்சை பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆபத்தான நாடுகள் என பட்டியலிட்டுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இருவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரூ.900 செலுத்தி ஆர்.டி., - பி.சி.ஆர்., சோதனை செய்யலாம். இதன் முடிவுக்காக ஐந்து முதல் ஆறு மணிநேரம் காத்திருக்க வேண்டும். ரூ.4,000 செலுத்தி துரித பி.சி.ஆர்., பரிசோதனையும் மேற்கொள்ளலாம். இதன் முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைத்துவிடும். ஆன்லைனில் முன்னரே பதிவு செய்தால் மேலும் காலதாமதம் குறையும். மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரேண்டமாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், அவர்கள் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை, பணம் செலுத்த வேண்டியதில்லை.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜன-202218:17:21 IST Report Abuse
Bhaskaran காவேரி மருத்துவமனை ஒரு பிரபல நாளிதழ் தன் தொழிலாளருக்கு நடத்திய மருத்துவமனையை விலைக்கு வாங்கியதாக பேச்சு .அந்த செலவை இம்மாதிரி சம்பாதிக்கிறாங்களோ
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
06-டிச-202114:28:45 IST Report Abuse
Gandhi விடியல் அரசின் கொள்ளை.
Rate this:
Cancel
02-டிச-202107:39:31 IST Report Abuse
குமார் கேரளாவில் இலவசம் விடியல் ஆட்சியில் பணம் எந்த பினாமிக்கு காசு போகுதோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X