‛‛ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை'': சோனியா வயிற்றில் புளியை கரைக்கும் மம்தா

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
மும்பை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று தற்போது இல்லை என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, அக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா தேசிய அளவில் கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள்
upa, Mamata, MamataBanerjee,sharadpawar, NCP, TMC, மம்தா,மம்தா பானர்ஜி

மும்பை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று தற்போது இல்லை என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, அக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா தேசிய அளவில் கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, திரிணமுல் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். இதனால், இரு கட்சிகளுக்கு இடையே பனிப்போர் நிலவுகிறது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு வந்துள்ள மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.


latest tamil news




மாற்று அணி முக்கியம்


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க ஒருவரும் இல்லை. இதனால், மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும். சரத்பவார், மூத்த தலைவர். அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினேன். சரத்பவார் கூறியதை நான் ஏற்று கொள்கிறேன். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்றும் இல்லை. வரலாற்றில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



ஒன்று சேர வேண்டும்

சரத்பவார் கூறுகையில், காங்கிரசாக இருந்தாலும் சரி அல்லது வேறு கட்சியாக இருந்தாலும் சரி, பா.ஜ.,வை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்தால், அவர்களை நாங்கள் வரவேற்போம். இன்றைய சூழ்நிலையில், ஒத்த எண்ணங்களை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஆக்கப்பூர்வமான தலைமையை ஏற்படுத்துவதே மம்தாவின் நோக்கம். வலிமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழல் குறித்து மட்டும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. தேர்தல் குறித்தும் சிந்தித்தோம். இந்த நோக்கத்திற்காகவே மம்தா வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


கனவு


latest tamil news


முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பேசும்போது, மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், மத்தியில் ஆளும் பா.ஜ.,வை எளிதில் வீழ்த்திவிடலாம் எனக்கூறினார்.


latest tamil news


இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் பொது செயலர் வேணுகோபால், இந்திய அரசியலின் உண்மையான நிலவரத்தை அனைவரும் அறிவார்கள். காங்கிரஸ் இல்லாமல், பா.ஜ.,வை தோற்கடித்த விட முடியும் எண்ணினால், அது கனவாகவே முடியும் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
01-டிச-202122:15:59 IST Report Abuse
r ravichandran எதிர் கட்சிகள் என்ன தான் திட்டம் போட்டாலும், அதை பிஜேபி முறி அடித்து விடுகிறது. நாடாளுமன்றத்தில் ஒன்று சேரவிடாமல் 12 உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்து, ஆம் ஆத்மி கட்சி, மம்தா பானர்ஜி கட்சி தனியாகவும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் தனியாகவும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்கட்சிகள் ஒற்றுமை சந்தி சிரிக்கும் நிலைமைக்கு இவர்களை பிஜேபி கொண்டு வந்து விட்டது.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
01-டிச-202122:10:42 IST Report Abuse
r ravichandran வரும் 5 மாநில தேர்தல், இவருக்கு நல்ல பதிலை கொடுக்கும். அதன் பிறகு அடங்கி விடுவார்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
01-டிச-202122:09:00 IST Report Abuse
r ravichandran மம்தாவுடன் சேருவதற்கு கம்யூனிச கட்சிகள் ஆதரவு தராது என்று நினைக்கிறேன். ஒருவேளை 15 கோடி பெற்று கொண்டு சேர்ந்தாலும் சேருவார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டை தாண்டி வேறு எங்கும் இல்லாத திமுக, காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே போகாது. எதிர்கட்சிகள் கூட்டணி என்பது வெறும் கானல் நீர் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X