நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம்: உலக சுகாதார அமைப்பு

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெனிவா: ‛‛எதிர்காலத்தில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம். ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்,'' என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் புதிய வைரஸ் தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
international, agreement, needed, Omicron,fight infections, World Health Organization, நோய்த்தொற்றுகள், எதிர்த்து போராட, சர்வதேச உடன்படிக்கை, அவசியம், உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: ‛‛எதிர்காலத்தில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம். ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்,'' என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


latest tamil news


உலகம் முழுவதும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் புதிய வைரஸ் தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்கு ஒமைக்ரான் என உலக சுகாதார மையம் பெயரிட்டது. இந்த உருமாறிய புதிய கொரோனா தொற்று பரவலை தடுக்க, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என இந்தியா சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்களை திருத்தி அமல்படுத்தியுள்ளது.


latest tamil news


ஒமைக்ரான் பயண ஆலோசனை அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததுள்ளதாவது: ஒமைக்ரான் பாதிப்புள்ள 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது. மேலும் பயணத் தடைகள் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தும்.

உடல்நிலை சரியில்லாதவர்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று பாதிப்பில் உள்ளவர்கள் அல்லது இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்) உள்ளவர்கள், பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம். ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்ததுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
01-டிச-202121:28:51 IST Report Abuse
Nagercoil Suresh இரண்டு மாதங்களுக்கு உலகம் பூராவும் லாக்டவுன் கொண்டு வாருங்கள், மருத்துவமனை மற்றும் மிக அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து அணைத்து நாடுகளின் பயணங்களுக்கு தடை விதிக்க சட்டம் கொண்டு வரவேண்டும் உலக சுகாதார அமைப்பு சீனாவை சம்மதிக்க வைத்தால் கொரோனா பறந்தே போய்விடும் ஆனால் செய்யமாட்டார்கள்...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-டிச-202118:14:55 IST Report Abuse
Kasimani Baskaran சைனா தடுப்பூசி விற்க உலகமே உதவவேண்டுமாம்...
Rate this:
Cancel
RK -  ( Posted via: Dinamalar Android App )
01-டிச-202118:06:39 IST Report Abuse
RK முதலில் சீனாக்காரனுக்கு சப்போர்ட் பண்ணுவதை நீங்கள் நிறுத்தவும். உலக மக்களை கொரோன துயரத்தில் ஆழ்த்தியது சீனாக்காரன்தான். கொரோன தோன்றியதை முதலில் கண்டுபிடிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X