எல்லையைத் தொட்டால் துப்பாக்கிதான் பேசும்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பனி மலையின் உச்சியில் ஏறிச் செல்லும் போது என்னுடன் வந்த சக வீரர் ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து இறந்தார், நண்பர் இறந்து போனதால் மனம் நொறுங்கிப் போய் துக்கம் எழுந்தாலும் எல்லைக்கு போகவேண்டிய கட்டாயம் காரணமாக நண்பரின் உடலை பத்திரமாக கொண்டு செல்லும் பொறுப்பை சிலரிடம் ஒப்படைத்துவிட்டு திட்டமிட்டபடி எங்கள் எல்லைப்பகுதிக்கு சென்று காவலை மேற்கொண்டோம் என்றார்latest tamil news


பனி மலையின் உச்சியில் ஏறிச் செல்லும் போது என்னுடன் வந்த சக வீரர் ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து இறந்தார், நண்பர் இறந்து போனதால் மனம் நொறுங்கிப் போய் துக்கம் எழுந்தாலும் எல்லைக்கு போகவேண்டிய கட்டாயம் காரணமாக நண்பரின் உடலை பத்திரமாக கொண்டு செல்லும் பொறுப்பை சிலரிடம் ஒப்படைத்துவிட்டு திட்டமிட்டபடி எங்கள் எல்லைப்பகுதிக்கு சென்று காவலை மேற்கொண்டோம் என்றார் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் முருகன்.
இந்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட தினமான டிசம்பர் 1ம் தேதியை எல்லைப்பாதுகாப்பு படையினரின் தியாகத்தை போற்றும் தினமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் நடத்தினர்.


latest tamil news


இந்த விழாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்களை கெளரவிக்கும் நிகழ்வும் ஒன்றாகும்.அவர்களின் சார்பில் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் முருகன் பேசியதாவது..
நான் இருபத்தைந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினேன் என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் சொல்லிக் கொள்கிறேன்.


latest tamil news


காஷ்மீரில் பாதுகாப்பு பணி எனக்கு ஒதுக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்கும்படி சொல்லப்பட்டது.நானும் சக வீரர்களும் முழங்கால் அளவு புதையும் பணியில் எங்களுக்கான துப்பாக்கி உள்ளீட்ட உபகரணங்களை சுமந்து கொண்டு மலை ஏற ஆரம்பித்தோம்.
இரண்டு நாள் பயணம் என்பது எல்லோருக்கும் தெரியும் வழியில் பனிப்புயலை சமாளிப்பது எப்படி என்பதெல்லாம் விளக்கப்பட்டது ஆனால் மலை ஏற ஏற சுவாசிப்பதுதான் பெரும் பிரச்னையாக இருந்தது.
முதல் நாள் பயணத்தை முடித்துவிட்டு மறுநாள் பயணத்தை தொடர்ந்து முக்கால்வாசி துாரம் ஏறியபோது கடுமையான சுவாசப் பிரச்னை காரணமாக உடன் வந்த இளம் ராணுவ வீரரும் நண்பருமானவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்து போனார்.
இது மாதிரி சம்பவங்கள் ராணுவத்தில் நடப்பது சகஜம்தான் என்றாலும் எங்கள் அணியில் நடந்த போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது ஆனால் அந்த வீரரின் மரணம் சக வீரர்களுக்கு சோர்வை உண்டாக்கிவிடக்கூடாது என்பதற்காக அணித்தலைவர் படபடவென செயல்பட்டு கிடைத்த பொருட்களை வைத்து அவரது உடலை சுமந்து கொண்டு அடிவாரத்திற்கு கொண்டு செல்ல சிலரை பணித்துவிட்டு மற்ற வீரர்களுடன் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நாங்கள் சக வீரருக்காக கண்ணீரை சிந்திவிட்டு நாட்டைக் காக்க மேற்கொண்டு நடக்க ஆரம்பித்து எங்களுக்கான எல்லையை அடைந்தோம்.கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அங்கேதான் இருந்தேன் இடையில் பதினைந்து நாள் விடுமுறை கிடைத்தது ஆனால் அங்கு இருந்து நான் இறங்கிவந்து ரயிலில் மாறி மாறி பயணம் செய்து ஊருக்கு வந்துவிட்டு திரும்ப அவசர அவசரமாக முகாமிற்கு திரும்ப எண்ணினால் கூட பதினைந்து நாள் போதாது ஆகவே கிடைத்த விடுமுறையைக்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாதுகாப்பு பணியில் இருந்தேன்.
இப்போது உள்ள எந்த வசதி வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் பனி மலையில் பணியாற்றியதை எண்ணும் போது மகிழ்வாகவே இருக்கிறது எனக்கு மட்டுமில்லை பொதுவாக ராணுவத்தை தேர்வு செய்பவர்களின் இளமைக்காலம் என்பது ராணுவத்திற்காக தியாகம் செய்யப்படும் காலமே என்றார்.
மேலும் சிலர் பேசுகையில் ராஜஸ்தான் எல்லை என்பது இருபது அடி இடைவெளி கொண்டதாகும் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருபது அடி இருக்கும் எதிர் எதிரே நாங்களும் அண்டை நாட்டு படையினரும் பார்த்து சிரித்துக் கொண்டாலும் அந்த இருபது அடிக்குள் யார் இறங்கினாலும் நாங்கள் பேசமாட்டோம் துப்பாக்கிதான் பேசும் என்றார்.
இப்போது ரயிலில் ரிசர்வேஷன் கிடைக்கிறது முன்பெல்லாம் ராணுவத்தினருக்கு சிறப்பு ஓதுக்கீடு கிடையாது கழிவறையில் பயணித்தபடி ஊருக்கு திரும்பிய அனுபவம் எல்லாம் உண்டு என்றார் ஒருவர்.
நான் என் மகளிடம் இருந்து வரும் கடிதத்தை ஒரு நாளைக்கு பத்து முறை என்று பல நாள் படித்து தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டு இருந்திருக்கிறேன் என்றார் மற்றொருவர்.
இப்படிப்பட்ட எல்லை காத்த,காக்கும் படை வீரர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டியது நமது அரசாங்க கடமை என்றனர் விழாக்குழுவினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-டிச-202100:17:58 IST Report Abuse
NicoleThomson வாழ்க ராணுவம் வெல்க அவர்களது புகழ்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-டிச-202120:01:06 IST Report Abuse
sankaseshan பிரிட்டிஷ்காரன் லண்டன் நில் இருந்து. நாட்டை ஆளவேண்டும். சொன்னது. சொரியார்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-டிச-202119:13:44 IST Report Abuse
Rasheel நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X