கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் குறித்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், தலைமை செயலரை ஆஜராக உத்தரவிட வேண்டி வரும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வீடுகள்,
நீர்நிலை ஆக்கிரமிப்பு, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்

சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் குறித்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், தலைமை செயலரை ஆஜராக உத்தரவிட வேண்டி வரும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றை கட்டி கொள்கின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது என தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்நிலைகளிலேயே குப்பை கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகம், போலீஸ் ஸ்டேசன் ஆகியவற்றை அமைத்தும் அரசு ஆக்கிரமித்துள்ளது என தெரிவித்தனர்.


latest tamil newsஇதை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு: தண்ணீர் மிகவும் அவசியமானது. தற்போது மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் 4 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 8 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அறிக்கை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில், தலைமை செயலரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த கருணையும் காட்டப்படாது என தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
02-டிச-202105:03:47 IST Report Abuse
anbu இந்துக்களின் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் திகதிகளை மாற்றி, கோவில்களை கொள்ளை அடித்து ஐந்து ஆண்டு காலம் ஓட்டலாம் என்று பார்த்தால் நீதிமன்றம் இப்படி எல்லாம் குறுக்கே நிக்குதே.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
02-டிச-202104:43:31 IST Report Abuse
Siva Kumar நாங்க தீமுககாரங்க என்னிக்குமே நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் மதிக்கமாட்டோம் அது எங்களின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கு எதிரானது.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
01-டிச-202120:49:33 IST Report Abuse
Vittalanand நான சென்னையை சேர்ந்தவசன். 1943 பிறப்பு. 80 வசயது.சென்னை ஸோடப்பேட்டை,மைலாப்பூர், ஆணை கவுனி ,புரஸை சூலைமேடு உலடக்கியதசக இருந்தது. புரஸை, ராயஓட்டை, சைதாப்பேட்டை,பாரிஸ்,பிராடவே இணைத்ஸ் டிராம் ஓடிக்கொண்டிருந்தது. 1950 ல் டிராம் நிறுத்தப்பட்டது. அன்று சென்னையோல் ஜனத்தொகைவ10 லட்சத்திற்கும் க்குறைவு. தொழில் வளர்ச்சியால் நகரம் விரிவடைந்து தாம்பரம், கிழக்கு கடற்கரசி, என்னோர்த்திருவள்ளுர் எஸ் விரிவடைந்து இப்பிசபற்றாக்குறை உள்ளது. எனவே திர்ஸ்ஸ்விப்ஸ் குஞ்சுகளின் ஆட்சியில் தென் மாவட்ட மக்களின் குடி பெயர்ச்சி , ஏரிகள் குட்டைகள் ஆக்கிரமிக்க பட்டு நிலம் கிடைக்கும் இடத்தில் எல்லாம் குடியிருப்புகள் தோன்றி உள்ளன. நிலைமை காட்டுக்கு மீறி போய்விட்டது. இயர்க்கும் மெல் சென்னை தாங்காது. தொழில் வளர்ச்சி சென்னையில் மட்டும் மிகா அதிகம். அடுத்தது கோவை. தென் மாநிலத்தவர் தசங்கள் ஊரில் ஒன்று சென்னையில் ஒன்று என இரண்டு இடங்களில் குடி இருக்கின்றனர். இதனாலசாலை போக்குவரத்து 200 சாதம் உயர்ந்துள்ளது. நீட்டவசலிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. மெரினா இடுகாடாகிவிட்டது. இனி மீட்சியில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X