பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் துளிர் விடும் கரும்பு; சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

Added : டிச 01, 2021
Share
Advertisement
ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிக்கு, ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நீர் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இரண்டு போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது.ஒரு போகத்தில், 6,400 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனைமலை என்றாலே நெல், கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. 10 ஆண்டுக்கு முன், 700 ஏக்கருக்கும் அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.கடந்த,
 மழையால் துளிர் விடும் கரும்பு; சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிக்கு, ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நீர் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இரண்டு போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது.ஒரு போகத்தில், 6,400 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனைமலை என்றாலே நெல், கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. 10 ஆண்டுக்கு முன், 700 ஏக்கருக்கும் அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.கடந்த, ஐந்து ஆண்டுகளாக மழை குறைவு, போதிய அளவு பாசன நீர் கிடைக்காத காரணத்தால், கரும்பு சாகுபடி பெரும் அளவு குறைந்தது. 2016ல், 190 ஏக்கரில் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.பாசன நீர் பற்றாக்குறை காரணமாக, பலரும் கரும்பு சாகுபடியை கைவிட்டு, நெல், வாழை, தென்னை உள்ளிட்ட மாற்றுப்பயிர்கள் சாகுபடிக்கு மாறியுள்ளனர். இதனால், கடந்த ஆண்டு, 75 ஏக்கர் அளவுக்கு கரும்பு சாகுபடி நடந்தது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் மீண்டும் கரும்பு சாகுபடியை துவங்கியுள்ளனர். மழையை பயன்படுத்தி தாத்துார் பிரிவு, அய்யாமடை, ரமணமுதலிபுதுார் பகுதிகளில் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.வேளாண்துறையினர் கரும்பு விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். மழையால் கரும்பு விவசாயம் இந்த ஆண்டு செழிப்படையும் என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X