3 வேளாண் சட்டங்கள் ரத்து ஜனாதிபதி ஒப்புதல்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்,உ.பி., உள்ளிட்ட மாநில விவசாயிகள் பேராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.



latest tamil news



மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்,உ.பி., உள்ளிட்ட மாநில விவசாயிகள் பேராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் தற்போது நடைபெறும் குளிர் காலகூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் ரத்து செய்வது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தது.


latest tamil news



அதன் படி கடந்த நவ.,29 ம் தேதி பார்லி குளிர் கால கூட்டம் துவங்கியது. முதல்நாளிலேயே குரல் வாக்கெடுப்பின் மூலம் மேற்கண்ட சட்ட மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இது குறித்த அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேளாண் மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (டிச.01) ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
02-டிச-202107:50:19 IST Report Abuse
arudra1951 பரமார்த்த குருவும் சீடர்களும் கதை கேவிப்பட்டதுண்டா அதுதான் பிஜேபி ஆட்சி
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
02-டிச-202106:41:42 IST Report Abuse
rajan தன நாட்டின் சொந்த குடிமக்களை கொலைசெய்து பின்னர் இல்லையென்று சட்டம் இயற்றிய ஒரே நாடு இந்தியா ஒரே ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி ஒரே பிரதமர் மோடி ஒரே அரசு பிஜேபி அரசு
Rate this:
Cancel
01-டிச-202123:40:14 IST Report Abuse
அப்புசாமி முதலில் வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல். இப்போ மசோதா ரத்துக்கு ஒப்புதல். இதுக்குன்னே சம்பளம் குடுத்து வெச்சிருக்காங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X