பார்லி.,யில் போராட்டம் தொடரும் 'சஸ்பெண்ட்' எம்.பி.,க்கள் அறிவிப்பு

Updated : டிச 03, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (9+ 11)
Share
Advertisement
புதுடில்லி:'எங்கள் மீதான, 'சஸ்பெண்ட்' உத்தரவை நீக்கும் வரை, பார்லிமென்ட் வளாகத்தில் எங்களுடைய போராட்டம் தொடரும்' என, 12 எம்.பி.,க்கள் அறிவித்துள்ளனர்.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.கடந்த கூட்டதொடரில் அமளியில் ஈடுபட்ட, 12 எதிர்க்கட்சி எம்.பி.,க் களை, இந்தக் கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான
பார்லி.,,சஸ்பெண்ட் ,எம்.பி.,க்கள்

புதுடில்லி:'எங்கள் மீதான, 'சஸ்பெண்ட்' உத்தரவை நீக்கும் வரை, பார்லிமென்ட் வளாகத்தில் எங்களுடைய போராட்டம் தொடரும்' என, 12 எம்.பி.,க்கள் அறிவித்துள்ளனர்.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.கடந்த கூட்டதொடரில் அமளியில் ஈடுபட்ட, 12 எதிர்க்கட்சி எம்.பி.,க் களை, இந்தக் கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இதில், ஆறு பேர் காங்.,கைச் சேர்ந்தவர்கள். திரிணமுல் காங்., மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா இருவர், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ.,வைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.'சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். இரண்டு சபைகளிலும், காலை 10:00 முதல் 11:00 மணி வரை அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபடும்' என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.,க்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
02-டிச-202117:40:43 IST Report Abuse
Sridhar நியூட்டன் ஓட மூன்றாம் விதி படி ஒரு போலீஸ் லாரிய கொண்டுவரலாமா?
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
02-டிச-202109:35:16 IST Report Abuse
தத்வமசி உருப்படி இல்லாத ஒரு வேலையை பாராளுமன்றத்தின் உள்ளேயோ அல்லது வெளியிலோ செய்ய வேண்டும். செய்யுங்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விடியும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-டிச-202108:39:29 IST Report Abuse
RajanRajan நம் ஜனநாயகம் தழைக்க இவனுங்க இப்படியே சாகும் வரை போராட வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X