ஐ.மு., கூட்டணி மறைந்து விட்டது பவாரை சந்தித்த பின் மம்தா பேட்டி

Updated : டிச 03, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (24+ 23)
Share
Advertisement
மும்பை:''ஐ.மு.கூ., எனப்படும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று இப்போது இல்லை; அது மறைந்து விட்டது,'' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெற்றது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும்
ஐ.மு., கூட்டணி மறைந்து விட்டது, பவார், சந்திப்பு, மம்தா

மும்பை:''ஐ.மு.கூ., எனப்படும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று இப்போது இல்லை; அது மறைந்து விட்டது,'' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெற்றது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் பதவியேற்றார். இதையடுத்து, திரிணமுல் காங்., கட்சியை, தேசிய அளவில் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் மம்தா ஈடுபட்டுள்ளார்.
அதோடு, 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, திரிணமுல் காங்., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கவும் அவர் முயற்சித்து வருகிறார். இதனால், திரிணமுல் - காங்கிரஸ் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பல மாநிலங்களில், காங்., மூத்த தலைவர்கள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி, திரிணமுல் காங்கிரசில் சேர்ந்து வருவது, காங்கிரஸ் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மம்தா மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் வந்தார். நேற்று மதியம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.பின் நிருபர்களிடம் மம்தா கூறியதாவது:மத்தியில் தற்போது நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க, ஒருவரும் இல்லை. இதனால், மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும். இது பற்றி மூத்த தலைவர் சரத்பவாருடன் தீவிர ஆலோசனை நடத்தினேன்.
சரத்பவார் கூறியதை நான் ஏற்று கொள்கிறேன். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்றும் இல்லை; அது மறைந்துவிட்டது. மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், மத்தியில் ஆளும் பா.ஜ.,வை எளிதில் வீழ்த்திவிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


சரத்பவார் கூறியதாவது:

காங்கிரசாக இருந்தாலும் சரி அல்லது வேறு கட்சியாக இருந்தாலும் சரி, பா.ஜ.,வை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்தால், அவர்களை நாங்கள் வரவேற்போம். ஒத்த எண்ணங்களை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஆக்கப்பூர்வமான தலைமையை ஏற்படுத்துவதே மம்தாவின் நோக்கம். பொது தேர்தல் குறித்தும் சிந்தித்தோம்.
இந்த நோக்கத்திற்காகவே மம்தா வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.கனவு தான்நாட்டு அரசியலின் உண்மையான நிலவரம், அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் இன்றி, பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும் என யார் நினைத்தாலும், அது கனவாகத் தான் முடியும்.
வேணுகோபால்,
பொதுச் செயலர், காங்.,

Advertisement




வாசகர் கருத்து (24+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
02-டிச-202121:58:17 IST Report Abuse
Barakat Ali காங்கிரஸ் மூலம் உண்டானதை கலைச்சாச்சு இப்போ தேசியவாத பவார் மீண்டும் உண்டாக்குவார் மம்தாவும் மகிழ்வார்
Rate this:
Cancel
Raja - Ramnad,இந்தியா
02-டிச-202121:57:17 IST Report Abuse
Raja சந்திரபாபு நாயுடு கதிதான் இந்த மம்தாவுக்கும் வரும். பிஜேபி யை வீழ்த்துவது எளிதல்ல.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
02-டிச-202118:03:35 IST Report Abuse
elakkumanan நம்ப ...சோறு ஊடகமெல்லாம் நாளைக்கு தலைப்பு செய்தி போடுவாங்க... புதிய நம்பிக்கை ஒளி கீற்று.. ரெண்டு களவாணிகள் ஜாமீன் விஷயமா பேசிகிட்டு இருந்தாங்க.. நம்ப ஊடகத்துக்கு, குஷி வந்துடும்.. ரெண்டு பெரும், திருட்டு கேசில் ஜாமீன் வாங்கவேண்டிய நிலையில் இருக்காங்க.. பழைய ராசாவும், அவங்க அம்மாவும் ஏற்கெனவே ஜாமீனில் தான்.. நம்ப ராசா மட்டும்தான் பிரி.. சேத்துக்கோங்க... சரியா இருக்கும்.. திகார் பற்றிய ஒரு நல்ல அறிமுகமும் அறிவும் இருந்தால் எதிர் காலத்தில் மனதைரியம் ஏற்படும்.. பாத்துக்கோங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X