பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவலை கையாளுவதில் சிறந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்!  இந்தியா 19 இடங்கள் முன்னேறி 26வது இடத்தை பிடித்தது

Updated : டிச 03, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : தற்ேபாது 'ஒமைக்ரான்' என்ற கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கையாண்டுள்ள நாடுகள் தொடர்பாக, 'புளூம்பர்க்' வெளியிட்டுள்ள நவம்பர் மாதத்துக்கான பட்டியலில், இந்தியா 19 இடங்கள் முன்னேறி, 26வது இடத்தில் உள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பர்க் என்ற செய்தி நிறுவனம், கொரோனா பரவலை சிறப்பாக கையாளும்
கொரோனா, கையாளுதல், சிறந்த நாடுகள், முன்னேற்றம்!  

புதுடில்லி : தற்ேபாது 'ஒமைக்ரான்' என்ற கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கையாண்டுள்ள நாடுகள் தொடர்பாக, 'புளூம்பர்க்' வெளியிட்டுள்ள நவம்பர் மாதத்துக்கான பட்டியலில், இந்தியா 19 இடங்கள் முன்னேறி, 26வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பர்க் என்ற செய்தி நிறுவனம், கொரோனா பரவலை சிறப்பாக கையாளும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நவம்பர் மாதத்துக்கான பட்டியலில், இந்தியா 19 இடங்கள் முன்னேறி, 26வது இடத்தில் உள்ளது.


53 அம்சங்கள்



இதற்கான காரணங்கள் குறித்து கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பாக 12 அம்சங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக, 53 அம்சங்கள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டன. மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமலும், பொருளாதாரம் உயரும் வகையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள நாடுகளில், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நவம்பர் மாத பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதுடன், பொருளாதார முன்னேற்றமும் வேகமாக இருப்பது, இந்தியாவின் முன்னேற்றத்துக்கு காரணமாகும். மேலும், தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது, அதற்கு மேலும் உதவியுள்ளது.கடந்த மே மாதத்தில் நாட்டில் தினசரி பாதிப்பு, நான்கு லட்சத்தை தாண்டியது. பரவல் வேகம் 97 சதவீதமாக இருந்தது. மிகச் சிறப்பான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளதால், தற்போது பாதிப்பு 7,000த்துக்கும் கீழே குறைந்துள்ளது.மொத்தம் 140 கோடி பேருடன், உலகில் அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.



தனிமனித கணக்கீடு



அதனால், பாதிப்பு 1,000த்தில் இருந்தாலும், தனிமனித அடிப்படையில் கணக்கிடும்போது, சதவீதம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், நவம்பர் மாதத்தில் முதலிடம் பெற்றுள்ள யு.ஏ.இ.,யை விட குறைவாக உள்ளது.இந்தியாவில் இதுவரை, 100 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும் பணி வேகமெடுத்து வருவதும், பட்டியலில் முன்னேறுவதற்கு உதவிஉள்ளது.

வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான, 12 அம்ச நடவடிக்கைகளில் ஒன்றான, தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணியருக்கு அனுமதி அளிக்கும் முடிவு, அதிக மதிப்பெண்களை பெற்றுத் தந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டுக்குள் இருந்த பயணக் கட்டுப்பாடுகள் முழுதுமாக தளர்த்தப்பட்டுள்ளன.அதேபோல், நவ., மாதத்தில் விமானப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை, கடந்த 2019ல் இருந்ததுடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


ஜி.டி.பி., கணிப்பு



நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப் பெரிய வளர்ச்சி இதுவாக உள்ளது. இதுவும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.பள்ளி, கல்லுாரிகள், தியேட்டர், 'மால்' எனப்படும் வணிக வளாகம், உணவு விடுதிகள் திறப்பு என, பெரும்பாலான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
பண்டிகை காலங்கள் இருந்தபோதும், கட்டுப்பாடுகளை அனைத்து மாநிலங்களும் தளர்த்தின. இதனால், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இது, தனிப்பட்ட மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பு குறைந்த நவம்பர்



நம் நாட்டில் 2020 ஜன., 30ல், முதல் கொரோனா தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை, 3.46 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நவ., மாதத்தில் தான் மிகக் குறைந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு மே மாதம் 6ம் தேதி மட்டும், 4.14 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதே நேரத்தில், இந்த நவ., மாதத்தில், 3.1 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து 54வது நாளாக, 20 ஆயிரத்துக்கும் குறைவான மற்றும் தொடர்ந்து 156வது நாளாக, 50 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது.


ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னடைவு



புளூம்பர்க் வெளியிட்டுள்ள நவம்பர் மாத பட்டியலில், பல ஐரோப்பிய நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன. அங்கு வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதே முக்கிய காரணமாகும்.யு.ஏ.இ., தொடர்ந்து, முதலாவது இடத்தில் இருந்து வருகிறது. சிலி, பின்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகியவை, முதல் ஐந்து இடங்களில் உள்ளன. துருக்கி, கனடா, ஸ்வீடன், பிரான்ஸ், டென்மார்க் ஆகியவை, அதற்கடுத்த இடங்களில் உள்ளன.அமெரிக்கா 13வது இடத்திலும், பிரிட்டன் 12வது இடத்திலும் உள்ளன. சீனா 28வது இடத்திலும், ரஷ்யா 44வது இடத்திலும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
02-டிச-202110:13:03 IST Report Abuse
Tamilan உலகளாவிய கூறு கேட்ட குப்பைகளின் தர வரிசையில் இடம்பெற மோடி அரசு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக இழந்தது இந்தியாவின் மானம் மரியாதை .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202106:01:16 IST Report Abuse
Kasimani Baskaran தெனாவெட்டாக மாஸ்க் கூட போடாமல் கூட்டமாக கும்மியடிப்பதில் நோய் பரவ வாய்ப்பு அதிகம்தான். சிகிட்சை பெறுவோர் மற்றும் அறிகுறியுள்ளோர் பற்றி கொடுக்கப்படும் கணக்கைப்பார்த்தால் நோயின் தாக்கம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். கோவிட்19 இந்தியாவிடம் தோற்றுப்போய்விட்டது என்று சொல்லலாமா என்றால் நிச்சயம் இல்லை. புதிய வகை வைரஸ்கள் திமுகவுக்கு கிளைக்கட்சிகள் வருவது போல தொடர்ந்து வரத்தான் செய்யும். ஆகவே உலக சுகாதார அமைப்பு பயம் காட்டுவதற்குத்தகுந்தது போல வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கவனமாகக்கையாண்டாலேயே 99% பிரச்சினை தீர்ந்து விடும். நாம் கவனமாக இருந்தால் உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஆதிக்கத்தில் பொய் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X