பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போட்டால் 'ஸ்மார்ட் போன்!'

Added : டிச 01, 2021
Share
Advertisement
ஆமதாபாத்:குஜராத்தின் ஆமதாபாதில், கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வோரில் ஒருவருக்கு, பரிசாக 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'ஸ்மார்ட்போன்' வழங்கப்படஉள்ளது.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.பல வழிகளில் முயற்சிஇங்கு, மக்கள் அனைவருக்கும், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதில்,
 தடுப்பூசி போட்டால் 'ஸ்மார்ட் போன்!'

ஆமதாபாத்:குஜராத்தின் ஆமதாபாதில், கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வோரில் ஒருவருக்கு, பரிசாக 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'ஸ்மார்ட்போன்' வழங்கப்படஉள்ளது.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.பல வழிகளில் முயற்சிஇங்கு, மக்கள் அனைவருக்கும், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதில், மாநில அரசு உறுதியாக உள்ளது. இ
ங்குள்ள ஆமதாபாதில், இதுவரை 78.7 லட்சம் பேர் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளனர்.இதில், 31 லட்சம் பேர், இரண்டு டோஸ்களையும் செலுத்தி உள்ளனர்; 47.7 லட்சம் பேர், முதல் டோஸை மட்டும் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு இரண்டாவது டோஸை செலுத்தி முடிக்க, மாநகராட்சி நிர்வாகம் பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள, மக்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு பரிசு திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.பரிசு திட்டம்நேற்று முதல், வரும் 7ம் தேதி வரை, தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களுக்காக, பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நாட்களில் இரண்டாம் டோஸ் செலுத்திக்கொள்ளும் மக்களில், குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'ஸ்மார்ட் போன்' பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X