பா.ஜ.,வின் வெற்றி ரகசியம் புத்தகம் வெளியிட்ட அமைச்சர்

Added : டிச 01, 2021
Share
Advertisement
பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால், அதன் வரலாறு, வெற்றி ரகசியம் குறித்து, கூடவே பயணித்துள்ள மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் புத்தகம் எழுதியுள்ளார்.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சரான இவர், பல மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சியில் பெரிதும் பங்கேற்றவர்.அமைப்புச் செயலராக இருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை
 பா.ஜ.,வின் வெற்றி ரகசியம் புத்தகம் வெளியிட்ட அமைச்சர்

பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால், அதன் வரலாறு, வெற்றி ரகசியம் குறித்து, கூடவே பயணித்துள்ள மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் புத்தகம் எழுதியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சரான இவர், பல மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சியில் பெரிதும் பங்கேற்றவர்.அமைப்புச் செயலராக இருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருக்கும் நெருக்கமானவர்.
ஜே.பி. நட்டாவுக்குப் பின், கட்சியின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு உள்ளவராகக் கருதப்படும் அவர், பிரபல பொருளாதார நிபுணர் இலா பட்நாயக் உடன் இணைந்து, 'பா.ஜ.,வின் வளர்ச்சி - உலகின் மிகப் பெரிய கட்சியானது எப்படி' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
இது, வரும் 2022 ஜனவரியில் வெளியாக உள்ளது. இதற்கான முன்பதிவு, இணையதளத்தில் துவங்கியுள்ளது.இது குறித்து, பூபேந்திர யாதவுக்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:பா.ஜ., குறித்து, அது உருவான 1980ல் சிலருக்கு தெரியும்; 2014ல் பலருக்கும் தெரியும்.
ஆனால், அதற்கு முன்பே அதற்கென ஒரு வரலாறு உள்ளது. ஜன சங்க காலம் துவங்கி, பா.ஜ.,வின் கோட்பாடுகள், அது மெருகூட்டப்பட்டது எப்படி, தேர்தல்களில் வெற்றி பெற்றது எப்படி என, கட்சி குறித்து அனைத்து தகவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். எதிர்கால சந்ததியினருக்கு, கட்சி குறித்த விளக்க கையேடாக இந்த புத்தகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- புதுடில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X