பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசியால் உயிரிழப்பை தடுக்கலாம்! :பொது சுகாதாரத் துறை திட்டவட்டம்

Updated : டிச 03, 2021 | Added : டிச 01, 2021
Share
Advertisement
சென்னை :''கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.தமிழகத்தில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணியர், பரிசோதனைக்கு பின்
தடுப்பூசி, உயிரிழப்பு,பொது சுகாதாரத் துறை திட்டவட்டம்

சென்னை :''கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.தமிழகத்தில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணியர், பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.


பரிசோதனை


இதில், உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட, 12 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்த, 134 பேருக்கு நடந்த பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று பாதிப்பில்லை என, உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஏழு நாட்கள் வீட்டு தனிமையில் உட்படுத்தப்பட்டுள்ளனர். எட்டாவது நாளில், மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பில் இருந்து தப்பலாம் என, அரசு அறிவித்துள்ளது.


முக கவசம்



இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:தமிழகத்தில், 5.78 லட்சம் பேர், 18 வயதை பூர்த்தி செய்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர். அவர்களில், நேற்று முன்தினம் வரை, 4.54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

அதேபோல், 2.56 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு கொண்டனர். அதன்படி, 78.58 சதவீதம் பேர் முதல் தவணை; 44.24 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்.மேலும், 1.24 கோடி பேர் முதல் தவணை; 80.50 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடாமல் உள்ளனர். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும், கொரோனா பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், தடுப்பூசி போட்டிருந்தால் உயிர்இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

தற்போது, கொரோனா தொற்றால் உயிரிழப்போரில் பெரும்பாலானோர், தடுப்பூசி போடாதவர்களாக உள்ளனர்.எனவே, ஒமைக்ரான் போன்ற எந்தவித பாதிப்புகளில் இருந்தும், தங்களையும், குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு சென்றால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X