பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச பயணியரை தனிமைப்படுத்த விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு

Updated : டிச 03, 2021 | Added : டிச 01, 2021
Share
Advertisement
சென்னை :வெளிநாடுகளிலிருந்து வரும் விமான பயணியருக்கு, சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனையும், ஆறு மணி நேரம் தனிமைப்படுத்துதலும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.கொரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் பரவாமல் தடுக்க, மத்திய சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது; தமிழக அரசும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. நேற்று முதல்
சர்வதேசம் , பயணியர், தனிமை, விமான நிலையம், ஏற்பாடு

சென்னை :வெளிநாடுகளிலிருந்து வரும் விமான பயணியருக்கு, சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனையும், ஆறு மணி நேரம் தனிமைப்படுத்துதலும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் பரவாமல் தடுக்க, மத்திய சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது; தமிழக அரசும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.


நேற்று முதல் அமல்



இதன்படி, தென் ஆப்ரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், சிங்கப்பூர் உட்பட 12 நாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வரும் விமான பயணியரிடம், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை செய்ய, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
சோதனை முடிவுகள் வரும் வரை, அந்த பயணியரை விமான நிலையத்திலேயே காத்திருக்க வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதை மேற்பார்வையிட, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை, அந்தந்த விமான நிலையங்களுக்கு தனி அதிகாரிகளை நியமித்துள்ளது.
இந்த நடைமுறை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. நேற்று வந்த சர்வதேச விமான பயணியர், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை செய்து, ஆறு மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டனர்.


அனுமதி இல்லை



அரசு அறிவிப்பின்படி, 12 நாடுகளில் இருந்து வரும் பயணியர் சோதனை மாதிரி கொடுத்த பின், தனிமைப்படுத்தப் படுவதற்காக, சர்வதேச விமான நிலையத்தில் உள்ள புதிய வருகை பகுதியை, விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், ஒரே நேரத்தில் 450 பயணியர் வரை தனிமைப்படுத்த முடியும்.அந்த தனிமைப்படுத்துதல் பகுதிக்கு, இதர பயணியர் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை. தனிமைப்படுத்துதல் நேரம் முடிந்த பின், பயணியரை ஒரே நேரத்தில் வெளியே அனுப்பாமல், பகுதி பகுதியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணியருக்கு தேவையான உணவு உட்பட, இதர வசதிகளுக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X