எதிர்பார்க்கிறது அரசு கல்லூரி... சர்க்கரை சேவு! தயார் நிலையில் புகார் பெட்டி!

Updated : டிச 02, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (1)
Advertisement
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகள், 'ஈயம் பித்தளைக்கு சர்க்கரை சேவு'க்கு போடாத குறையாக, துருப்பிடித்து காணப்படுகின்றன. இதன் வாயிலாக, மாணவ மாணவியரின் புகார்களுக்கு கல்லுாரி நிர்வாகம் அளிக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.பாலியல் தொந்தரவால், பிளஸ், 2 மாணவி தற்கொலை, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அரசு கல்லுாரி உதவி
எதிர்பார்க்கிறது அரசு கல்லூரி... சர்க்கரை சேவு!   தயார் நிலையில் புகார் பெட்டி!

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகள், 'ஈயம் பித்தளைக்கு சர்க்கரை சேவு'க்கு போடாத குறையாக, துருப்பிடித்து காணப்படுகின்றன. இதன் வாயிலாக, மாணவ மாணவியரின் புகார்களுக்கு கல்லுாரி நிர்வாகம் அளிக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

பாலியல் தொந்தரவால், பிளஸ், 2 மாணவி தற்கொலை, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் கைது விவகாரங்களை தொடர்ந்து, அனைத்து கல்வி நிறுவனங்களிலும், புகார் பெட்டி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி நிர்வாக கட்டடத்தில் இரு புகார் பெட்டிகள் பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டன.ஒரு புகார் பெட்டி ராகிங் தொடர்பான புகார்களுக்கும், மற்றொன்று போலீசாரிடம் தெரிவிக்க வேண்டிய புகார்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கல்லூரி முதல்வர் அலுவலகத்தின் முன்னரும் புகார் பெட்டி ஒன்று உள்ளது.ராகிங் புகார்களுக்காக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி, துருப்பிடித்து துாசு படிந்து காணப்படுகிறது. புகார் பெட்டியின் நிலையை பார்த்தாலே, அது திறக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆனது தெரியும்.

போலீசாரிடம் தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியின் நிலை, இதைவிட மோசமாக உள்ளது. திறந்த நிலையில் இருக்கும் அப்புகார் பெட்டியில், வயர்கள் சுருட்டி வைக்கப்பட்டுள்ளன.புகார் பெட்டிகளின் நிலையை பார்த்தாலே, மாணவர்களின் புகார்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தெரிந்து விடும். மீண்டும் இன்னொரு மாணவன் அல்லது மாணவி பாதிக்கப்படும் முன், கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒருவேளை, சர்க்கரை சேவுக்கு போடலாம் என காத்திருக்கிறார்களோ என்னவோ!


'இரு நாட்களில் புகார் பெட்டி'

கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி கூறுகையில், ''இரு பாலருக்கும் தனித்தனியாக புகார் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. பழைய கட்டடத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அதில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை, மாணவர்களே உடைத்து விட்டனர். அவ்விரு புகார்பெட்டிகளும் மிகவும் பழையவை. அதற்கு பதில் வேறு இடங்களில், புகார் பெட்டிகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, மாணவியருக்கு என, தனித்தனியாக புகார்பெட்டிகள் இரு நாட்களில் வைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-202107:07:36 IST Report Abuse
அப்புசாமி அவனவன் மொபைல் போன், இமெயில்,வாட்சப் யுகத்தில் இருக்கும்.போது இவிங்க இப்பத்தான் பழைய கள்ளிப்பெட்டி டெக்னாலஜிக்கு வந்திருக்காங்க. இவிங்க கிட்டே படிச்சு, வேலை கிடைச்சு...நாராயணா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X