அரசியல் செய்தி

தமிழ்நாடு

தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

Updated : டிச 03, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை :அ.தி.மு.க., தற்காலிக அவைத் தலைவராக, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பின், அவைத் தலைவர் பதவி காலியாக இருந்தது.தற்காலிக அவைத் தலைவராக, தமிழ்மகன் உசேனை நியமிக்க, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.இணை
தற்காலிகம், அவைத் தலைவர்,தமிழ்மகன் உசேன்

சென்னை :அ.தி.மு.க., தற்காலிக அவைத் தலைவராக, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பின், அவைத் தலைவர் பதவி காலியாக இருந்தது.தற்காலிக அவைத் தலைவராக, தமிழ்மகன் உசேனை நியமிக்க, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.


இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வழிமொழிந்தார். அதைத் தொடர்ந்து, அவர் தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.பன்னீர்செல்வம் பேசுகையில், ''கூட்டத்தில் நடப்பதை வெளியில் சொல்லாதீர்கள். கடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் நடந்தது வெளியில் தெரிந்ததால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது. எதுவாக இருந்தாலும், கூட்டத்தில் கூறுங்கள்; வெளியில் பேசாதீர்கள்,'' என்றார்.
பழனிசாமி பேசுகையில், ''நாங்கள் சொல்வதை கேட்டு செயல்படுங்கள். பிரச்னைகளை தெரியப்படுத்துங்கள். உங்களுக்குள் பேசிக் கொள்ளாதீர்கள்.''அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்,'' என்றார்.

தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து, தமிழ்மகன் உசேன் கூறிய தாவது:கட்சியின் துவக்க கால தொண்டர்களுக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க.,தான். எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும், உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய பதவிகளை வழங்குவர். அந்த அடிப்படையில், கட்சி தலைமை ஏகமனதாக, அவைத் தலைவர் பதவியை தற்காலிகமாக எனக்கு வழங்கி உள்ளனர். இது உழைப்புக்கு கிடைத்த கவுரவம்.
இவ்வாறு அவர் கூறினார்.


ஆட்டோவில் சென்ற அவைத் தலைவர்



அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க, எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தமிழ்மகன் உசேன், ஆட்டோவில் கட்சி தலைமை அலுவலகம் வந்தார். அவர் கட்சியின் தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கூட்டம் முடிந்த பின், ஆட்டோவில் தன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் கட்சி துவக்கியதில் இருந்து, அ.தி.மு.க.,வில் உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
02-டிச-202113:18:11 IST Report Abuse
yavarum kelir உசைன் எப்படி தமிழ் மகன் ஆக முடியும் ?
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
02-டிச-202112:57:07 IST Report Abuse
Gopal சிறுபான்மை சமூகத்திலிருந்து ஒரு ஆளை நீக்கியவனுங்க வேறு ஒரு வெத்துவேட்டை கொண்டுவந்திருக்கானுங்க.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-டிச-202110:11:50 IST Report Abuse
Matt P இவர் நாகர்கோயில்காரர் எம்ஜி ஆர் சினிமாவில நடிச்சுக்கிட்டிருக்கும் போதே எம்ஜிஆர் மன்ற செயலாளரா இருக்கிறார். இன்னும் ஆட்டோவில் தான் செல்கிறார் என்றால் ஆச்சரியமா தான் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X