அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆக்சிஜன் வசதியில் தமிழகம் தன்னிறைவு'

Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:''ஆக்சிஜன் வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில், 'ரெனால்ட் நிசான்' நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவற்றை திறந்து வைத்த அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:இந்நிறுவனம், 5
 'ஆக்சிஜன் வசதியில்  தமிழகம் தன்னிறைவு'

சென்னை:''ஆக்சிஜன் வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில், 'ரெனால்ட் நிசான்' நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவற்றை திறந்து வைத்த அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
இந்நிறுவனம், 5 கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்துள்ளது. முதல்வரிடம் கொரோனா பேரிடர் நிதியாக, 1 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. மீதமுள்ள 4 கோடி ரூபாயில், சென்னையில் அண்ணா நகர், கலைஞர் நகர், தண்டையார்பேட்டை; திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட மருத்துவமனைகளில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், 270 கி.லி.,ட்டராக இருந்த ஆக்சிஜன் உற்பத்தி, தற்போது, 744.67 கி.லி.,ராக உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
02-டிச-202117:32:39 IST Report Abuse
sankar இதுதான் "வாயிலே வடை"
Rate this:
Cancel
M Rajesh - TIRUNELVELI,இந்தியா
02-டிச-202116:00:17 IST Report Abuse
M Rajesh கோவாலு, இந்த புதிய அரசு ஒரு ஆணியும் புடுங்க வில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆக்சிசன் உற்பத்தியை மிகத் துரிதமாக முன்னெடுத்து அதில் வெற்றி கண்டது மத்திய அரசுதான் உங்கள் திருட்டு திராவிட கும்பல் இல்லை. ஸ்டிக்கர் பாய்ஸ். அனைத்து மத்திய அரசு திட்டங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டி திரிவதே இவர்களின் பொழப்பு.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
02-டிச-202115:34:22 IST Report Abuse
Anand இனி உருட்டு உருட்டுனு உருட்டுவானுக அதன் தொடர்ச்சியாக தளபதிக்கு ஏதோ ஒரு பலக்லைக்கழகத்திடம் மிரட்டி உருட்டி டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு பண்ணுவாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X