தமிழ்நாடு

'பூஸ்டர் டோஸ்' செலுத்த அனுமதிகோரி 'சீரம்' நிறுவனம் விண்ணப்பம்

Added : டிச 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :நாட்டு மக்களுக்கு, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின், 'பூஸ்டர் டோஸ்' செலுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.நம் நாட்டில், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசியும், மக்களுக்கு இரண்டு டோஸ்களாக
'பூஸ்டர் டோஸ்' செலுத்த அனுமதிகோரி 'சீரம்' நிறுவனம் விண்ணப்பம்

புதுடில்லி :நாட்டு மக்களுக்கு, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின், 'பூஸ்டர் டோஸ்' செலுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
நம் நாட்டில், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசியும், மக்களுக்கு இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, மக்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும், கூடுதல் டோஸ் செலுத்தப்படுமா என்ற கேள்வி வலம் வருகிறது.

இந்நிலையில் 'ஒமைக்ரான்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவத் துவங்கி உள்ள நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்கக்கோரி, கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன.இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க, மத்திய அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்றமும் கடந்த வாரம் அறிவுறுத்தியது.இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கக்கோரி, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.


latest tamil news



அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:பல நாடுகளில், மக்களுக்கு ஏற்கனவே பூஸ்டர் டோஸ்களை செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டு விட்டன. நம் நாட்டில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை. எனவே, பூஸ்டர் டோஸை நாட்டு மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Anand - Chennai,இந்தியா
02-டிச-202110:15:45 IST Report Abuse
Sundar Anand நல்லவிஷயம் திரு பிரதமர் அவர்கள் சீக்கிரம் நல்ல முடிவை எடுப்பார்
Rate this:
Cancel
02-டிச-202106:47:54 IST Report Abuse
அப்புசாமி பொறுங்கோ சீரம் வாள். ஆத்மநிர்பரா கீழே அமெரிக்காவிலேருந்து தரவுகள் வந்து சேரலை. அப்புறமேட்டி அனுமதி குடுப்பாங்க.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
02-டிச-202106:21:14 IST Report Abuse
 Muruga Vel வருஷா வருஷம் பூஸ்ட்டர் ஷாட் போட வேண்டிய கட்டாயத்துக்கு இந்த மருந்து தயாரிப்பாளர்கள் பொது மக்களை ஆளாக்குவார்கள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X