புதுக்கோட்டை:பிளஸ் 1 மாணவியிடம் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியர், 25 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்து ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவியிடம், அவரது ஆசிரியர் சண்முகநாதன், 52, என்பவர், மொபைல் போனில் ஆபாசமாக பேசும் ஆடியோ, சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது.
மாணவியின் பெற்றோர் புகாரின்படி, புதுக்கோட்டை மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில், செப்டம்பர் 23ல், ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருமயம் சிறையில் இருக்கும் ஆசிரியர் சண்முகநாதன் ஜாமின் கோரி, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிபதி சத்யா, கடும் நிபந்தனைகள் விதித்து சண்முகநாதனுக்கு ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.அவரது உத்தரவில், 'ரத்த பந்தம் கொண்ட இருவர் ஜாமின் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; 25 லட்சம் ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்து, அதன் ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.'ஜாமினில் வெளியே வந்தபின், தினமும் காலை 10:30 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE