தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மகன்

Added : டிச 02, 2021
Advertisement
புதுக்கோட்டை:தந்தை உயிரிழந்த தகவல் கேட்டு மனமுடைந்த மகன், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் பறந்து வந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் சுப்பையா, 68; உடல்நலக் குறைவால் இறந்தார். இவரது மகன் சசிகுமார், 49; திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார்.சசிகுமார் கம்பெனி வேலையாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அவரது தந்தை இறந்த
 தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க  ஹெலிகாப்டரில் பறந்து வந்த மகன்

புதுக்கோட்டை:தந்தை உயிரிழந்த தகவல் கேட்டு மனமுடைந்த மகன், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் பறந்து வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் சுப்பையா, 68; உடல்நலக் குறைவால் இறந்தார். இவரது மகன் சசிகுமார், 49; திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார்.சசிகுமார் கம்பெனி வேலையாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அவரது தந்தை இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, சிங்கப்பூரில் இருந்து விமானம் வாயிலாக பெங்களூரு வந்தார்.அங்கிருந்து சாலை மார்க்கமாக வர தாமதம் ஆகும் என்பதால், 5 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து, தனியார் ஹெலிகாப்டர் வாயிலாக, நேற்று மாலை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் வந்தார். அங்கிருந்து காரில், சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்றார்.


திரும்புவதில் சிக்கல்

பெங்களூரில் இருந்து புதுக்கோட்டை வந்த தனியார் ஹெலிகாப்டருக்கு, தேனியில் இருந்து 'ஒயிட் பெட்ரோல்' கொண்டு வந்து நிரப்ப காலதாமதம் ஏற்பட்டது. பின், ஹெலிகாப்டர் புறப்பட தயாரான நிலையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பைலட்டும், அவரது உதவியாளரும் புதுக்கோட்டை ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு, இன்று புறப்பட திட்டமிட்டுள்ளனர். ஆயுதப்படை மைதானத்தில் நிற்கும் ஹெலிகாப்டருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X