சென்னை 'உஷ்ஷ்ஷ்!': கண்காட்சியில் முறைகேடு?

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கண்காட்சியில் முறைகேடு? கடந்த மாதம் 14 முதல், 27ம் தேதி வரை, டில்லியில் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி நடந்தது. சிறந்த அரங்குகளாக பீஹார், அசாம், கேரள மாநில அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட்டன.பல ஆண்டுகளாக தமிழகம் இதில் பங்கேற்கிறது; ஒவ்வொரு ஆண்டும் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, அரங்குகளை


கண்காட்சியில் முறைகேடு?


கடந்த மாதம் 14 முதல், 27ம் தேதி வரை, டில்லியில் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி நடந்தது. சிறந்த அரங்குகளாக பீஹார், அசாம், கேரள மாநில அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட்டன.latest tamil news


பல ஆண்டுகளாக தமிழகம் இதில் பங்கேற்கிறது; ஒவ்வொரு ஆண்டும் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, அரங்குகளை அமைக்கிறது. ஆனால், ஒரு முறை கூட விருது பெற்றதில்லை. காரணம், பொருட்காட்சி கருப்பொருளுக்கேற்ப அரங்கு அமைக்கப்படாதது தான்.

இந்த ஆண்டு கருப்பொருள், 'சுயசார்பு இந்தியா!' முதல் இரண்டு நாட்களுக்குள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரங்கிற்கு வந்து சென்று விடுகின்றனர். அதன்பின் அரங்கு தனியாருக்கு வாடகை விடப்பட்டு, சில ஆயிரம் வாடகை கணக்கு காண்பித்துவிட்டு, பெரும் தொகை கொள்ளை அடிக்கப்படுகிறதாம்.

மேலும் அரங்கு அமைத்தது, அலங்காரம் செய்தது, மின் சாதனங்கள் பொருத்தியது, சென்னையில் இருந்து லாரியில் பொருட்கள் ஏற்றிச் சென்றது என, 1.25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். எல்லாவற்றிலும் 'கமிஷன்' தான். எந்த ஆட்சி வந்தாலும் இது தான் நடக்கிறது.

இது தவிர, அனைவரும் விமானத்தில் சென்று வர தனிச் செலவு. கடந்த ஆட்சியில் கான்ட்ராக்ட் எடுத்தவர்களே, இந்த ஆண்டும் எடுத்துள்ளனர். இதுகுறித்தெல்லாம் உயர் அதிகாரிகள் விசாரித்தால், பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.


வழக்கில் சிக்கியும் திருந்தாத அதிகாரி!உள்ளாட்சி தணிக்கை துறையில் உயர் பதவி வகிக்கும் ஒரு அதிகாரி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 'மாஜி' அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமாக இருந்தார்.

கோவையில் உள்ள ஒரு பல்கலையில் அந்த அதிகாரி பணியாற்றியபோது, அவர் மீது எழுந்த முறைகேடு புகார் தொடர்பான வழக்கு, லஞ்ச ஒழிப்பு துறையில் நிலுவையில் உள்ளது. எந்த நேரமும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் நிலையும் உருவாகி உள்ளது. ஆனால், அந்த அதிகாரி இதுபற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தில், ஓ.எஸ்.ஆர்., நிலம் ஒதுக்காததால், மாநகராட்சிக்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், மாஜிக்கு ஆதரவாக, அந்த கட்டணத்தை ரத்து செய்யும் வகையில் கோப்புகளை திருத்தி தர வேண்டும் என, சென்னை மாநகராட்சி தணிக்கை அதிகாரிக்கு, அவர் தொடர் 'டார்ச்சர்' கொடுத்து வருகிறாராம்.

'என்ன வழக்கு பாய்ந்தால் என்ன, பதவி இருக்குற வரை, அதிகாரத்தை வச்சு, சம்பாதிக்கணும்' என்ற ரீதியில் செயல்படுகிறார். 'உப்பு திங்கிறவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்' என, சக ஊழியர்கள் காதோடு காதாக பேசுகின்றனர்.


அவர் போனார்; இவர் வந்தார்!கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலராக இருந்த தமிழ் மகன் உசேனுக்கு, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியை வழங்குவதாக, முதல்வராக இருந்த பழனிசாமி, துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதி அளித்தனர்.


latest tamil news


ஆனால், எம்.பி.,யாக இருந்த அன்வர் ராஜா, அவர்களை சரிசெய்து, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரானார். இந்நிலையில், கடந்த மாதம் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமியை ஒருமையில் பேசியது தொடர்பாக, அன்வர் ராஜாவை நிர்வாகிகள் கண்டித்தனர்; அவர் மன்னிப்பு கோரினார்.

கூட்டம் முடிந்த பின், கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து, ஊடகங்களிடம் பேசினார். அதைத் தொடர்ந்து கட்சி தலைமை, அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இது சிறுபான்மையினத்துக்கு எதிராக, அ.தி.மு.க., செயல்படுவது போன்ற நிலையை ஏற்படுத்துவதாக இருந்தது.

அதை சரிசெய்ய, உடனடியாக தமிழ்மகன் உசேனை, கட்சியின் தற்காலிக அவைத் தலைவராக, கட்சி தலைமை நியமித்தது. ஆட்சியில் இருந்தபோது, அன்வர் ராஜாவால் கிடைக்க இருந்த பதவி பறிபோனது; தற்போது, அவர் கட்சியில் இருந்து சென்றதால், உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது!

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-டிச-202121:06:16 IST Report Abuse
meenakshisundaram முதல்வர் உடனடியாக 'ஆய்வு 'செய்து ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்பதே எல்லா தமிழர்கள் மற்றும் திராவிடர்களின் ஆசை .வேண்டுகோள் .-ஆமா .எல்லாத்துக்கும் குழுவை அமைத்தால் அப்போ அரசு அதிகாரிங்க .இலக்காக்கள் .மந்திரிகள் எல்லோரும் இன்னாத்துக்கு இருக்கானுவ ?வெறுமே காசு வாங்கவா ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-டிச-202111:07:25 IST Report Abuse
duruvasar திராவிடர்களையும் , திராவிட கொள்கைகளையும் கொச்சைப்படுத்தி எழுதி குண்டர் சட்டத்தில் சிறை செல்ல ஆசைப்படுபவர்கள் இதையெல்லாம் பேசலாம். தமிழக ஊடகங்களை பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாய் கொட்டிக் கிடக்கின்றன.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-டிச-202109:56:30 IST Report Abuse
sankaseshan இரண்டு கழகங்களும் அதிகாரிகள் யாரும் யோக்கியமில்லை காசு சம்பாதிப்பது ஒன்றுதான் குறிக்கோள் இவர்கள் திரும்ப திரும்ப தேர்ந்தெடுக்கும் மக்கள் முட்டாள்கள் ஏமாளிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X