விடை பெற்றன 36 ஆண்டு கால வீடுகள்; அரசு ஊழியர்கள் குடும்பம் காத்த இல்லம்

Added : டிச 02, 2021
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் 36 ஆண்டுகளாக அரசு ஊழியர் குடும்பங்களை பாதுகாத்து வந்த வீடுகள் சேதமடைந்ததால் அதனை இடித்து அகற்றும் பணி நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984ல் சிவகங்கை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் கட்டினர். இங்கு பணிபுரியும் உதவியாளர் முதல் அலுவலக கண்காணிப்பாளர் வரை அனைத்து


சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் 36 ஆண்டுகளாக அரசு ஊழியர் குடும்பங்களை பாதுகாத்து வந்த வீடுகள் சேதமடைந்ததால் அதனை இடித்து அகற்றும் பணி நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984ல் சிவகங்கை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

அக்கால கட்டத்தில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் கட்டினர். இங்கு பணிபுரியும் உதவியாளர் முதல் அலுவலக கண்காணிப்பாளர் வரை அனைத்து தரப்பு ஊழியர்களின் குடும்பத்தினர் வசிக்க 1985 ம் ஆண்டில் மருதுபாண்டியர் நகர் வளாகத்தில் 288 வீடுகள் கட்டப்பட்டது.மாவட்ட அளவில் பணிபுரியும் அரசு ஊழியர், கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார் பிற துறை அலுவலகங்களில் பணிபுரிந்த ஊழியர்களின் குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.வீட்டின் தன்மைக்கு ஏற்ப ஏ- பிளாக் முதல் இ-பிளாக் வரை அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டி வாடகைக்கு விட்டது. காலப்போக்கில் உரிய பராமரிப்பின்றி குடியிருப்புகள் சிதிலமடைந்து வந்தன. குறிப்பாக 1970ம் ஆண்டில் 48 காலனியில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட 48 வீடுகள் முற்றிலும் சேதமானதால் அவற்றை 50 ஆண்டுகள் கழித்து அகற்றினர். அடுத்த கட்டமாக 36 ஆண்டுகளே ஆன நிலையில் சேதமான 264 வீடுகளை மட்டுமே இடித்து அகற்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒப்பந்த அடிப்படையில் உத்தரவிட்டுள்ளது. தற்போது இயந்திரங்கள் மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X