சிறுத்தையிடம் போராடி குழந்தையை மீட்ட தாய்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சித்தி : வீட்டு வாசலில் இருந்த போது, சிறுத்தை கவ்விச் சென்ற தன் குழந்தையை, துரத்திச் சென்று போராடி மீட்ட, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மலைவாழ் பெண்ணுக்கு, சமூக வலைதளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது. மத்தியப் பிரதேசம், சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் புலிகள் காப்பகத்துக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிரண், தன் குழந்தைகளுடன், குடிசை வாசலில் குளிர் காய்ந்து


சித்தி : வீட்டு வாசலில் இருந்த போது, சிறுத்தை கவ்விச் சென்ற தன் குழந்தையை, துரத்திச் சென்று போராடி மீட்ட, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மலைவாழ் பெண்ணுக்கு, சமூக வலைதளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.
latest tamil news


மத்தியப் பிரதேசம், சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் புலிகள் காப்பகத்துக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிரண், தன் குழந்தைகளுடன், குடிசை வாசலில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, அவருடைய, 8 வயது மகன் ராகுலை கவ்விச் சென்றது.இதனால் அதிர்ச்சி அடைந்த கிரண், தன் மற்ற இரண்டு குழந்தைகளை குடிசைக்குள் அனுப்பிவிட்டு, சிறுத்தையை துரத்திச் சென்றுள்ளார். காட்டுக்குள் 1 கி.மீ., துாரத்துக்கு சென்ற அவர், சிறுத்தையை கம்பால் அடித்து தாக்கினார்.latest tamil news


அதையடுத்து, குழந்தையை விட்ட அந்த சிறுத்தை, அவரை தாக்கியுள்ளது; சிறுத்தையுடன் அவர் போராடியுள்ளார். இதற்கிடையே, சத்தம் கேட்டு கிராம மக்களும் அங்கு வந்தனர். அதையடுத்து, சிறுத்தை காட்டுக்குள் தப்பிச் சென்றது.

சிறுத்தை தாக்கியதில், கிரண் மற்றும் அவருடைய மகனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.மிகவும் வீரத்துடன் சிறுத்தையுடன் போராடி, குழந்தையை காப்பாற்றிய அந்த தாயை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பாராட்டி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
02-டிச-202113:34:11 IST Report Abuse
pattikkaattaan தாயின் பாசம், வீரமாக மாறி சிறுத்தை புலியோடு போராடி பிள்ளையை மீட்டிருக்கிறது... வீரத்தாய்க்கு வணக்கங்கள் ..
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
02-டிச-202108:42:48 IST Report Abuse
ravikumark What a courage? We are missing these kind of people in urban, politics and corporates. Salute to this woman for her bravery.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-டிச-202108:42:03 IST Report Abuse
duruvasar தமிழச்சிகளுக்கு முறமே போதுமானது. இதை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X