பா.ஜ.,வின் வெற்றி ரகசியம் புத்தகம் வெளியிட்ட மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால், அதன் வரலாறு, வெற்றி ரகசியம் குறித்து, கூடவே பயணித்துள்ள மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் புத்தகம் எழுதியுள்ளார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சரான இவர், பல மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சியில் பெரிதும் பங்கேற்றவர்.அமைப்புச் செயலராக இருந்த அவர், பிரதமர் நரேந்திர


புதுடில்லி: பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால், அதன் வரலாறு, வெற்றி ரகசியம் குறித்து, கூடவே பயணித்துள்ள மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் புத்தகம் எழுதியுள்ளார்.



latest tamil news



மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சரான இவர், பல மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சியில் பெரிதும் பங்கேற்றவர்.அமைப்புச் செயலராக இருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருக்கும் நெருக்கமானவர்.

ஜே.பி. நட்டாவுக்குப் பின், கட்சியின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு உள்ளவராகக் கருதப்படும் அவர், பிரபல பொருளாதார நிபுணர் இலா பட்நாயக் உடன் இணைந்து, 'பா.ஜ.,வின் வளர்ச்சி - உலகின் மிகப் பெரிய கட்சியானது எப்படி' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.


latest tamil news



இது, வரும் 2022 ஜனவரியில் வெளியாக உள்ளது. இதற்கான முன்பதிவு, இணையதளத்தில் துவங்கியுள்ளது.இது குறித்து, பூபேந்திர யாதவுக்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:பா.ஜ., குறித்து, அது உருவான 1980ல் சிலருக்கு தெரியும்; 2014ல் பலருக்கும் தெரியும்.ஆனால், அதற்கு முன்பே அதற்கென ஒரு வரலாறு உள்ளது.

ஜன சங்க காலம் துவங்கி, பா.ஜ.,வின் கோட்பாடுகள், அது மெருகூட்டப்பட்டது எப்படி, தேர்தல்களில் வெற்றி பெற்றது எப்படி என, கட்சி குறித்து அனைத்து தகவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.எதிர்கால சந்ததியினருக்கு, கட்சி குறித்த விளக்க கையேடாக இந்த புத்தகம் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
02-டிச-202111:11:23 IST Report Abuse
Samathuvan இந்த எம் எல் ஏ, எம் பீ க்களை எப்படி வாங்குனீங்க, எப்படி வாங்குவது, பின்ன இந்த கார்பரேட்டுக்கு எப்படி எல்லாம் உதவுறீங்க, எல்லா பணம் மோசடி செய்தவனையும் எப்படி அயல் நாடுகளுக்கு பத்திரமா அனுப்பி வச்சிங்க என்பதெல்லாம் இதுல கரீட்டா மறக்காம இந்த புத்தகத்துல எழுதிடீங்களா. வரலாறு முக்கியம் அமைச்சரே.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-202109:13:02 IST Report Abuse
Sampath Kumar வோட்டு மெஷினில் ஓட்டையை பூட்டு வோட்டு வாங்கின உங்க தந்திரத்தை என்னவென்று சொல்வது எதுக்கு ஒரு புத்தகம் வேற அதுக்கு இங்க பாராட்டு வேற
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
02-டிச-202109:02:15 IST Report Abuse
m.viswanathan சாலமோன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தி, வெற்றிக்கு காரணம், பொய் பித்தலாட்டபேச்சா, இ வி எம் இயந்திரமா என நடத்தலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X