பொது செய்தி

தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை ரூ.101 அதிரடி உயர்வு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : வணிக காஸ் சிலிண்டர் விலை 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, 915.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப,


சென்னை : வணிக காஸ் சிலிண்டர் விலை 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, 915.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதத்தின் முதல் நாளன்று காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும்.


latest tamil news



தமிழகத்தில் அக்டோபரில் வீட்டு சிலிண்டர், 915.50 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் விலை நவம்பரில் மாற்றப்படாத நிலையில், வணிக சிலிண்டர் விலை, 268 ரூபாய் உயர்த்தப்பட்டது. இரண்டாவது மாதமாக இம்மாதமும் வீட்டு சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. வணிக சிலிண்டர் விலை 2,133ல் இருந்து 101.50 ரூபாய் உயர்த்தி, 2,234.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
02-டிச-202112:15:07 IST Report Abuse
ramesh ஆட்டுக்குட்டி இப்போது மே... என்று கத்துமா
Rate this:
raja - Cotonou,பெனின்
02-டிச-202116:50:51 IST Report Abuse
rajaஆட்டுக்குட்டி எப்போதும் "மே" ன்னுதான் கத்தும் சமசீர் உடன்பிறப்பே.......
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-டிச-202111:19:52 IST Report Abuse
பாமரன் நவம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட பட்ஜஇணைந்து சதவீதம் குறைந்துள்ளது... ஆனாலும் மத்திய அரசின் கோரப்பசி அடங்கலை
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
02-டிச-202110:03:34 IST Report Abuse
pattikkaattaan தமிழ்நாடு அரசு காஸ் விலையை குறைக்கவேண்டும் - அண்ணாமலையார் போராட்டம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X