வணிக சிலிண்டர் விலை ரூ.101 அதிரடி உயர்வு| Dinamalar

வணிக சிலிண்டர் விலை ரூ.101 அதிரடி உயர்வு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (14)
சென்னை : வணிக காஸ் சிலிண்டர் விலை 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, 915.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப,


சென்னை : வணிக காஸ் சிலிண்டர் விலை 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, 915.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதத்தின் முதல் நாளன்று காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும்.


latest tamil news



தமிழகத்தில் அக்டோபரில் வீட்டு சிலிண்டர், 915.50 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் விலை நவம்பரில் மாற்றப்படாத நிலையில், வணிக சிலிண்டர் விலை, 268 ரூபாய் உயர்த்தப்பட்டது. இரண்டாவது மாதமாக இம்மாதமும் வீட்டு சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. வணிக சிலிண்டர் விலை 2,133ல் இருந்து 101.50 ரூபாய் உயர்த்தி, 2,234.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X