திருட்டு பழிக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.15 கோடி இழப்பீடு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மான்ட்கோமரி : அமெரிக்காவில் திருட்டுப் பழிக்கு ஆளான பெண்ணுக்கு இழப்பீடாக 15 கோடியே 70 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த லெஸ்லெய்க் என்ற பெண், வால்மார்ட் கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது அவர், 3,500 ரூபாய் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மின் விளக்குகளை திருடியதாக, கடை மேலாளர் குற்றஞ்சாட்டினார். இதை

மான்ட்கோமரி : அமெரிக்காவில் திருட்டுப் பழிக்கு ஆளான பெண்ணுக்கு இழப்பீடாக 15 கோடியே 70 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த லெஸ்லெய்க் என்ற பெண், வால்மார்ட் கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது அவர், 3,500 ரூபாய் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மின் விளக்குகளை திருடியதாக, கடை மேலாளர் குற்றஞ்சாட்டினார்.

இதை லெஸ்லெய்க் நர்ஸ் மறுத்த போதும் அதை மேலாளர் ஏற்காமல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, லெஸ்லெய்க் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பின் இந்த வழக்கு கைவிடப்பட்டதாக லெஸ்லெய்க்கு தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



எனினும், வால்மார்ட் நிறுவனத்தின் சட்ட ஆலோசனை நிறுவனம், லெஸ்லெய்க் மீது வழக்கு தொடர உள்ளதாக 'நோட்டீஸ்' அனுப்பி வந்தது. இதை எதிர்த்து லெஸ்லெய் தொடர்ந்த வழக்கில், அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக, வால்மார்ட், 15 கோடியே 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது: லெஸ்லெய்க், கடை உதவியாளர் தயவின்றி, 'பார்கோடு' வாயிலாக பொருட்களை பட்டியலிட்ட போது திடீரென இயந்திரம் பழுதாகி உள்ளது. உடனே, ஒரு பணியாளர் லெஸ்லெய்க்கு பொருட்களை பட்டியலிட உதவி உள்ளார்.

அந்த பணியாளர் கவனக்குறைவால், கிறிஸ்துமஸ் விளக்குகளை பட்டியலில் சேர்க்க தவறியுள்ளார். அதற்கு, லெஸ்லெய்க் மீது திருட்டு பழி சுமத்தியது குற்றம். மேலும், வழக்கு தொடருவதாக லெஸ்லெய்க்கை மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு வால்மார்ட் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
02-டிச-202117:38:33 IST Report Abuse
THINAKAREN KARAMANI தவறு எங்கேயென்று ஒன்றுக்கு பலமுறை தீர ஆராய்ந்து பிறகு திருட்டுப் பட்டம் கட்டியிருக்கலாம். தீர ஆராய்ந்து பார்க்காமல் போடப்பட்ட வழக்குக்கு 15.70 கோடி தண்டனை. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
02-டிச-202113:57:47 IST Report Abuse
pattikkaattaan நம்ம ஊருல திருடிட்டு போறவங்கள பிடிக்கிறதுதான் கஷ்டம் ..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
02-டிச-202113:19:20 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அமெரிக்காவில் சட்டம் தனது கடமையைச் செய்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X