திண்டிவனம்-திண்டிவனம் அருகே ரேஷன் பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி ஏரிக் கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.திண்டிவனம், சந்தைமேடு நுகர்வோர் வாணிபக்கழகத்தில் இருந்து நேற்று ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு, நொளம்பூர் சாலை வழியாக அண்டப்பட்டு, ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளுக்குச் சென்றது.லாரியை, செஞ்சி ரோட்டைச் சேர்ந்த தேவபாலு, 55; ஓட்டினார். டிரைவர் அருகே லோடுமேனான வேம்பூண்டியை சேர்ந்த திருமலை, 57; உதவியாளர் கோடீஸ்வரன், 55; ஆகியோரும், பின்னால் மூட்டைகள் மீது ஊரல் பட்டணத்தைச் சேர்ந்த முருகன், 47; என்பவரும் அமர்ந்து சென்றார்.மாலை 3:00 மணியளவில் கீழ்கூடலுார் ஏரிக்கரை வளைவில் சென்றபோது, எதிரே பைக்கில் வந்த இருவர் மீதும் மோதாமல் இருக்க டிரைவர், வலது புறமாக லாரியை திருப்ப முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள ஏரிக்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், மேலே அமர்ந்து வந்த முருகன் மீது மூட்டைகள் சரிந்தது. அதில் காயமடைந்த அவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஏரி நீரில் சரிந்தது.விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE