மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் கருவறை முன்புறம் உள்ள அர்த்த மண்டபத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மதியம் 12:45 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட வேண்டும் என்பதால், பட்டர்கள் 3:30 மணிக்கு வந்தனர். அர்த்த மண்டப கதவை திறந்தபோது தரையில் விரிக்கப்பட்டிருந்த 'மேட்' தீப்பிடித்து புகைந்து கொண்டிருந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.
முதற்கட்ட விசாரணையில், மண்டபத்தில் சரவிளக்கு ஒன்றின் திரி பட்டு எரிந்திருக்கலாம் என தெரிந்தது. அர்த்த மண்டபத்தில் எலி தொந்தரவு உள்ளது. நெய் தீபத்திரியை எடுத்து வரும்போது 'மேட்' டில் பட்டு தீப்பிடித்திருக்கலாம் என்கின்றனர்.
ஏற்கனவே 2018 பிப்ரவரியில் வீரவசந்தராய மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது கோவில் நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE