பொது செய்தி

தமிழ்நாடு

காகிதமில்லா நிர்வாக நடைமுறை; 'டிஜிலாக்கரில்' பதிய அரசு உத்தரவு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 'காகிதமில்லா நிர்வாகம்' என்ற நடைமுறையை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசின், 'டிஜிலாக்கர்' முறையை பின்பற்ற, அனைத்து துறைகளுக்கும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் வெளியிட்ட அரசாணை:நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று பெறாமல்,
DigiLocker, TN govt, Paperless Governance

சென்னை : 'காகிதமில்லா நிர்வாகம்' என்ற நடைமுறையை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசின், 'டிஜிலாக்கர்' முறையை பின்பற்ற, அனைத்து துறைகளுக்கும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் வெளியிட்ட அரசாணை:நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று பெறாமல், டிஜிட்டல் வாயிலாக, டிஜிலாக்கர் செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யும் முறையை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காகிதமில்லா நிர்வாகம் என்ற நடைமுறையை ஊக்கப்படுத்த, அனைத்து மாநிலங்களையும், டிஜிலாக்கர் முறையில் இணைய அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news


இதன்படி, டிஜிலாக்கர் முறையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பல்கலைகளும் இணைய, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக இயக்குனர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.அவர் அளித்த பரிந்துரையை, தமிழக அரசு ஆய்வு செய்து, டிஜிலாக்கர் முறையில், அனைத்து அரசு அலுவலகங்களும், பல்கலைகளும் பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது.

நாட்டின் குடிமகன்கள், எந்த மூலையில் இருந்தும், தங்களின் வாகன உரிமம், மதிப்பெண் பட்டியல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சான்றிதழ்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் பெற, இந்த முறை வழிவகுக்கும்.எனவே, அரசு அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் என, அனைத்து அரசு அலுவலகங்களும், டிஜிலாக்கரில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravindhar Gandhidas - coimbatore,இந்தியா
02-டிச-202110:20:41 IST Report Abuse
Ravindhar Gandhidas வரவேற்க வேண்டிய காலம் கடந்த முறை. இதேபோல் நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் இது போல் பெரும் வழியிலும், மாறுதல்கள், தவறுகள் தகுந்த ஆதாரத்துடன் இணையத்தில் பதிவேற்றும் முறையும், அதற்குரிய கட்டணத்தை அங்கேயே செலுத்தும் முறையும் கொண்டு வரப்பட வேண்டும். விசாரணை எனில் நேரில் ஆஜராகும் தேதியும் நேரமும் இணையத்தில் தெரியப்படுத்தவேண்டும். விசாரணை முடிவும் இணையத்தில் ஏற்றப்பட வேண்டும். ஊழல் மற்றும் அதிகார துஷ்ப்ரயோகத்தால் நொந்து போன மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202106:23:34 IST Report Abuse
Kasimani Baskaran உருப்படியான யோசனை. திருட்டுத்தனமாக செயலிகளை பதிவிறக்கம் செய்யும் பொருட்டு ரூட் செய்யப்பட்ட ஆண்டிராய்டு போன்களில் கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் தனிப்பட்ட தகவல்களை எளிதில் அடுத்தவர் திருடிவிட வாய்ப்புண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X