நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : டிச 02, 2021 | |
Advertisement
கடலுார்,-மழையால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவு தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

கடலுார்,-மழையால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவு தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் செல்லங்குப்பத்தில் உள்ள கைத்தறி துணிநுால் துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ., நெசவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கருப்பையன் கோரிக்கைகள் குறித்து பேசினார். மாவட்ட தலைவர் ஆளவந்தார். பொருளாளர் தயாளன், கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநுால் உதவி இயக்குனரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X