பொது செய்தி

தமிழ்நாடு

டிச.,9ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு; மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், வரும் 9ம்தேதி வெளியிடப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்டோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினர். நகர்ப்புற உள்ளாட்சி
Voters List, Election Commission, EC, வாக்காளர் பட்டியல், வெளியீடு, தேர்தல் கமிஷன்

சென்னை : 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், வரும் 9ம்தேதி வெளியிடப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்டோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வரும், 9ம் தேதி வெளியிடப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் ஆன்லைன் தகவல் பதிவு, ஓட்டுச்சாவடிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், மாற்றுதிறனாளிகள், முதியோர்களுக்கான வசதிகள், ஓட்டுச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பேரூராட்சிகள் கமிஷனர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் விசுமகாஜன், நகராட்சிகள் முதன்மை தேர்தல் அலுவலர் தனலட்சுமி, தேர்தல் உதவி கமிஷனர் அகஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
02-டிச-202107:52:27 IST Report Abuse
duruvasar ஆளுங்கட்சியை வெற்றிபெற உறுதிசெய்யும் வகையில் ஆணையத்தின் செயல்பாடு இருக்கவேண்டும் என்பதே தமிழ் பற்றாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X