பொது செய்தி

இந்தியா

ஹிந்து பக்தர்களுக்கு 'விசா': பாகிஸ்தான் தூதரகம் அறிவிப்பு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : தங்கள் நாட்டின் பல்வேறு ஹிந்து மத வழிபாட்டு தலங்களுக்கு வருகை தரும் 136 பேருக்கு 'விசா' வழங்கப்பட்டு உள்ளதாக, பாக்., துாதரம் கூறி உள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது ஷதானி தர்பார். இதனை நிறுவிய சிவனின் அவதாரமாக கருதப்படும் சத்குரு சந்த் ஷதரம் சாஹிபின் 313வது அவதார விழா கொண்டாட்டம், நாளை மறுநாள் முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
pilgrims, Pakistan, Visa, Shadani Darbar, India, இந்தியா, பாகிஸ்தான், விசா

புதுடில்லி : தங்கள் நாட்டின் பல்வேறு ஹிந்து மத வழிபாட்டு தலங்களுக்கு வருகை தரும் 136 பேருக்கு 'விசா' வழங்கப்பட்டு உள்ளதாக, பாக்., துாதரம் கூறி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது ஷதானி தர்பார். இதனை நிறுவிய சிவனின் அவதாரமாக கருதப்படும் சத்குரு சந்த் ஷதரம் சாஹிபின் 313வது அவதார விழா கொண்டாட்டம், நாளை மறுநாள் முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நம் நாட்டில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பங்கேற்பது வழக்கம்.


latest tamil news



இதன்படி தற்போது 'இந்தியாவிலிருந்து வரும் 136 பக்தர்களுக்கு 'விசா' வழங்கப்பட்டு உள்ளது' என, டில்லியில் உள்ள பாக்., துாதரகம் நேற்று கூறி உள்ளது.அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பாக்., மரியாதை தருவதுடன், மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முயற்சியாக இதை கருத வேண்டும் என துாதரகம் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Tel aviv,இந்தியா
02-டிச-202109:29:04 IST Report Abuse
Raja பாகிஸ்தான்காரனுக்கு நல்லா தெரியும் இங்குள்ள மானம்கெட்ட இந்துக்களுக்கு பிரியானி பொட்டலத்தை தூக்கி போட்டால் எல்லாத்தையும் விட்டுவிட்டு செல்வான் என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X