பொது செய்தி

தமிழ்நாடு

டிச.,02: பெட்ரோல், டீசல் விலையில் 29வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 28 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 28 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.latest tamil news


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இரண்டும் லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டிவிற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாயினர்.


latest tamil newsதமிழகத்தில் கடந்த மாதம்(நவ.,) 3ம் தேதி லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும்; டீசல்102.59 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதைமுன்னிட்டு, மத்திய அரசு, 3ம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.

அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாயின. இன்று (டிச.,01) வரை 29 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் உள்ளது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
02-டிச-202111:21:52 IST Report Abuse
ஜெயந்தன் தினம் தினம் விலை ஏற்றும் போது ...அதற்கு காரணம் ஆயில் கம்பெனி கள் என்று புளுகுவது...தேர்தல் நேரத்தில் மட்டும் ...விலை ஏற்றாமல் இருந்தால் அதற்க்கு பிஜேபி அரசு மார் தட்டி கொள்வது...இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி மக்களை ஏமாற்றி கொண்டிருப்பார்கள்.. 5 மாநில தேர்தலில் இவர்களை விரட்டி அடித்தால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும்..
Rate this:
Cancel
Karunanidhi - Madurai,இந்தியா
02-டிச-202111:17:25 IST Report Abuse
Karunanidhi During the week petrol price has reduced by 15% union government has revoked the reduction in price, so it is same. Union Government has cheated the public by drama. If it real decrease in Central Tax and duties, then the petrol and diesel price should be less by now for this week
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-டிச-202110:08:20 IST Report Abuse
பாமரன் ///...பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன....///.. டெயிலி நியூஸா வரும் இந்த கட் காபி பேஸ்டை நம்பனும் மக்களே... மேலும் ///...29 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் உள்ளது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...// இதையும் நம்பனும்... அப்போதான் சோறு போடுவார்களாம்... இடையில் பதினைந்து சதவீதம் வரைக்கும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததே ஏன் பெட்ரோல் விலை குறையலைன்னு கேக்கறவன் ரத்தம் கக்கி சாவான்... ஆன்டி இந்தியன் என போற்றப்படுவான்.. அக்காங் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X