எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் மூழ்கிய வீட்டு மனை பிரிவுகள் காணோம்: சி.எம்.டி.ஏ., அங்கீகாரத்துக்கு யார் பொறுப்பு?

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: நகரமைப்பு சட்ட விதிகளின்படி, சி.எம்.டி.ஏ., அங்கீகாரம் வழங்கிய மனைப்பிரிவுகள், அனுமதி வழங்கிய கட்டடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்த அனுமதி விவகாரங்களில் நடந்த விதிமீறல்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை பெருநகர் பகுதியில் நிலங்களை வகைப்படுத்தி, நகரமைப்பு சட்டங்களின் அடிப்படையில் கட்டட அனுமதி விதிகளை சி.எம்.டி.ஏ., வகுத்துள்ளது. இந்த
வெள்ளம், வீட்டு மனைபிரிவுகள், காணோம், சிஎம்டிஏ, அங்கீகாரம், பொறுப்பு

சென்னை: நகரமைப்பு சட்ட விதிகளின்படி, சி.எம்.டி.ஏ., அங்கீகாரம் வழங்கிய மனைப்பிரிவுகள், அனுமதி வழங்கிய கட்டடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்த அனுமதி விவகாரங்களில் நடந்த விதிமீறல்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில் நிலங்களை வகைப்படுத்தி, நகரமைப்பு சட்டங்களின் அடிப்படையில் கட்டட அனுமதி விதிகளை சி.எம்.டி.ஏ., வகுத்துள்ளது. இந்த விதிகளின்படி இருக்கும் கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவுகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்குவதாக கூறப்படுகிறது.


கோளாறு


நகரமைப்பு சட்டப்படி ஒரு மனைப்பிரிவு, குடியிருப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்கும் போது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். இதில், தொழில்நுட்ப குழு கூட்டத்தில், பொதுப்பணித்துறை சார்பில் சில அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்த திட்டங்களில் தான் வீடு, மனைகளை மக்கள் வாங்குகின்றனர். சமீபத்திய மழை வெள்ளத்தால் இந்த அங்கீகாரம் தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை பெருநகரில் சோழவரம், புழல், வில்லிவாக்கம், குன்றத்துார், பரங்கிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ளன.

சென்னையில் வடகிழக்கு பருவ மழை கொட்டும்போது, இந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறுகின்றன.இதில், 70 சதவீதம் மனைகள், கட்டடங்கள், சி.எம்.டி.ஏ., சட்ட விதிகளின் அடிப்படையில் முறையாக திட்ட அனுமதி பெற்றுள்ளன. மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்ததிலும், திட்ட அனுமதி வழங்கியவர்கள் நழுவினர். தற்போது வெள்ள பிரச்னையிலும் நழுவுகின்றனர். திட்ட அனுமதி வழங்குவதில் என்ன கோளாறு என்பதை கண்டுபிடித்து, அரசு சரி செய்ய வேண்டும்.ஒருவேளை கோளாறு அதிகாரிகளிடம் இருந்தால், அவர்களை கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news




நிபந்தனை

இது குறித்து தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது:மனைகள் அங்கீகாரம், கட்டட அனுமதி வழங்குவது தனிப்பட்ட ஒரு துறையின் பணி அல்ல. சி.எம்.டி.ஏ., மட்டுமின்றி பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலை துறை என, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு.கடந்த, 15 ஆண்டுகளில் இத்துறைகளுக்கு இடையிலான இடைவெளி வெகுவாக அதிகரித்துவிட்டது. ஒரு துறையின் உத்தரவை, மற்ற துறைகள் மதிப்பதில்லை. உத்தரவு போட்டு கட்டுப்படுத்தும் நிலையில் சி.எம்.டி.ஏ.,வும் இல்லை. சி.எம்.டி.ஏ., ஒரு திட்ட அனுமதி வழங்கும்போது, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்று தேவை. தகுதி இல்லாத இடங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய தடையின்மை சான்று வழங்கப்படுகிறது.அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை, யாரும் சரி பார்ப்பது இல்லை. இதுபோன்ற கோளாறுகளை சரி செய்தால் மட்டுமே, வெள்ளம் போன்ற பிரச்னை களை சமாளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


கட்டுப்பாடுகளுக்கு பஞ்சம் இல்லை!


சென்னை பெருநகருக்கான முழுமை திட்டத்தில், சில குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி இல்லை என, தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



இந்த இடங்கள் விபரம்
* கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகள்
* கிழக்கு கடற்கரை சாலையில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில், நிலத்தடி நீர் பாதுகாப்புக்காக கட்டுமான திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
* செங்குன்றம், புழல் நீர்த்தேக்கங்களை ஒட்டிய 27 கிராமங்கள், நீர் பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு, கட்டுமான அனுமதி தடை செய்யப்பட்டு உள்ளன.
* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதிகளிலும், கட்டுமான திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த கட்டுப்பாடுகள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. இவற்றை அமல்படுத்த வேண்டிய சி.எம்.டி.ஏ., தான், இப்பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கி உள்ளது.


நில வகைப்பாடு ஏன்?

சென்னை பெருநகரில் நில வகைபாடு மாற்றங்கள் காரணமாகவே, பெரும்பாலான நீர்நிலைகள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய வெள்ளத்துக்கு, இதுவே பிரதான காரணம். சி.எம்.டி.ஏ.,வின் புள்ளி விபரங்கள் அடிப்படையில், ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நில வகைப்பாடு மாற்றங்கள்:


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bangaruswamy ("SWAMY") - Mount Druitt, NSW,ஆஸ்திரேலியா
03-டிச-202109:24:17 IST Report Abuse
Bangaruswamy ( கிழக்கு கடற்கரை சாலையில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில், நிலத்தடி நீர் பாதுகாப்புக்காக கட்டுமான திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட செய்தி இன்று 03 டிசம்பர் 2021 வெளியாகியுள்ளது. நல்லது. இன்னும் எத்தனை காலம்தான் இந்த கட்டுப்பாடுகளை நடைமுறையில் வைத்திருப்பது? (1) இந்த பகுதியில் நிலம் வாங்கி எந்த பரிவர்தனையும் செய்யமுடியாமல் இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? உதாரணம் சர்வே நம்பர் 62 (பார்ட்) கோவிந்தன் நகர். இங்கு வீடு, மனை, குருமந்திரம் போன்ற பொது இடங்கள் பல ஆண்டுகளாக முக்கிய பணிகளை செய்யமுடியாமல் பொருளாதாரம் தளர்ச்சி அடைந்து உள்ளது. (2) மணியம்மை சாலையை ஒட்டிய கோலவிழி அம்மன் தெருவில் அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் தெருவில் பாதி ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த சர்வே நம்பர் 62 (பார்ட்) பற்றி கூடிய விரைவில் நல்ல முடிவுகள் எடுத்து கோவிந்தன் நகர் சர்வே நம்பர் 62 (பார்ட்) விடுவிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
02-டிச-202119:33:48 IST Report Abuse
CBE CTZN "தகுதி இல்லாத இடங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய தடையின்மை சான்று வழங்கப்படுகிறது.அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதா என்பதை, யாரும் சரி பார்ப்பது இல்லை" - தகுதி இல்லாத இடங்களுக்கு எதற்காக அனுமதி தரவேண்டும், சி.எம்.டி.ஏ.வை யார் நிர்பந்தித்தார்கள். முறையாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி உரியவர்களுக்கு தண்டனை வழங்கி அதை கால தாமதம் இல்லாமல் நிறைவேற்றவும் வேண்டும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
02-டிச-202115:16:24 IST Report Abuse
raja தேன் எடுத்த உடன்பிறப்புகள் புறங்கை நக்கிட்டானுவோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X