பீதியை கிளப்ப வேண்டாம்; ஒருங்கிணைந்து செயல்படுவோம்: தொற்று நோய் நிபுணர்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜோகனஸ்பர்க் : 'தென் ஆப்ரிக்காவை தனிமைப்படுத்துவதால் மட்டும்,'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுத்துவிட முடியாது' என, தொற்று நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாக கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவ துவங்கியுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என
Omicron, Corona Virus, Covid 19

ஜோகனஸ்பர்க் : 'தென் ஆப்ரிக்காவை தனிமைப்படுத்துவதால் மட்டும்,'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுத்துவிட முடியாது' என, தொற்று நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாக கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவ துவங்கியுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ், இப்போது வரை 14 நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பல நாடுகள், தென் ஆப்ரிக்கா செல்ல தங்கள் நாட்டினருக்கு தடை விதித்துள்ளன. தென் ஆப்ரிக்காவிலிருந்து பயணியர் வரவும் அவை தடை விதித்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், தென் ஆப்ரிக்காவின் தொற்று நோய் நிபுணர் சலிம் அப்துகரிமன் கூறியதாவது:தென் ஆப்ரிக்காவை தனிமைப்படுத்துவதால் மட்டும் ஒமைக்ரான் வைரஸ்பரவலை தடுத்துவிட முடியாது. வரும் நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவலின் வேகம், பல நாடுகளில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது தான் ஒரே வழி.

மக்களிடம் பீதி ஏற்படுத்துவதை, ஊடகங்கள் நிறுத்த வேண்டும். சமூக வலைதளங்களிலும், யாரும் வதந்தி பரப்பக் கூடாது. இதற்கு முன், நாம் இரண்டு கொரோனா பரவல்களை சந்தித்துள்ளோம்.எந்த வைரசும், தொற்று நோயும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு பரவத்தான் செய்யும். எனவே, நாம் வைரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து நின்று சவாலை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-202107:48:37 IST Report Abuse
அப்புசாமி மக்கள் பீதியை விடுங்க. இதுமாதிரி கெகப்பி விட்டாத்தான் ரெண்டே நாளில் உலக பங்கு சந்தையை கீழே கொண்டுபோய் பலரது பாக்கெட்டையும் காலி பண்ணிட்டாங்க. ரெண்டே மாசத்துல எல்லாம் சரியாயிடும். ஆனா, கைமாறுன பணம்? அதுக்குத்தான் இத்தனை பீதி கெளப்புறாங்க. இந்தியாவுல குடுத்த 20 லட்சம் கோடியை இருக்கப்பட்டவங்க பங்குச் சந்தை லவட்டியாச்சு. இனிமே பங்குச் சந்தை மேலே போகும். ஆனா,டெரிவேட்டிவ் டிரேடிலே பணம் போட்டவன் பிண்டியாயிடுவான். ஸ்டாப் லாஸ் வெச்சவனுக்கும் நஷ்டம். மருந்து கம்பெனிகளுக்கு செம லாபம். இதுதான் பாட்டம்லைன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X