அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அண்ணாமலை

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (95)
Share
Advertisement
சென்னை : 'ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தயாரிக்கப்பட்ட பைகளின் மாதிரி வெளியாகி உள்ளது. அவற்றில், 'தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்ற வாசகம் இடம்
Annamalai, BJP, Tamil New Year, TN govt

சென்னை : 'ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தயாரிக்கப்பட்ட பைகளின் மாதிரி வெளியாகி உள்ளது. அவற்றில், 'தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால், தை பொங்கல் நாளை, தமிழ் புத்தாண்டு நாள் என்று மாற்ற அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil news


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்., 14 சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.ஹிந்து மதத்தை பின்பற்றுகிற மக்கள் மட்டுமல்ல; அனைத்து தமிழர்களுமே தமிழ் புத்தாண்டை நல்ல காரியங்கள், தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாளாக கருதி, மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது தி.மு.க., அரசு வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து தமிழ் புத்தாண்டு நாளை குழப்பி கொண்டிருக்கின்றனர்.ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
02-டிச-202118:20:57 IST Report Abuse
Nachiar அண்ணாமலையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. அண்ணாமலை அவர்களுக்கும் நன்றி. சூரிய தேவன்க்கு நன்றி சொல்லும் தய் பொங்கல் நல் வாழ்த்துக்கள் அனைத்து தமிழர்களுக்கும்.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
02-டிச-202116:24:48 IST Report Abuse
krish இதை தேர்தல் விடியல் சாதனை பட்டியலில் சேர்ப்பதா அல்லது வேதனை/சோதனை பட்டியலில் சேர்பதா?
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
02-டிச-202116:22:54 IST Report Abuse
Prakash தமிழ் ...ஹிந்தி எதிர்ப்பு ...பா ஜ க எதிர்ப்பு ...ஒன்றிய அரசு ...மோடி ...தமிழ் புத்தாண்டு ..."மத்திய அரசின் திட்டத்தில் லேபிள்" ஓட்டுவது ....வெறுப்பு அரசியல் ...அநாகரிக அரசியல் ...ஊழல் பெருச்சாளிகள் என்று திட்டிவிட்டு அவரையே அமைச்சர் பதவியில் அமர்த்துதல் ...தமிழ்நாட்டில் கொரோநா மருத்து தயாரிப்போம்... இதை வைத்தே தேர்தலில் வென்றாகிவிட்டது ....இனியும் வெல்வோம் ...ஏமாறுவது மக்கள் பழக்கம் அதற்க்கு நாங்கள் என்ன செய்ய ...இப்படிக்கு..SINCERELY தீ மு க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X