பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடில் காய்கறி விலை உயர்வு கத்தரி, அவரை கிலோ ரூ.100க்கு விற்பனை

Added : டிச 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை-தக்காளி, கத்தரிக்காயை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.மழை காரணமாக, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பலவகை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம்
 கோயம்பேடில் காய்கறி விலை உயர்வு கத்தரி, அவரை கிலோ ரூ.100க்கு விற்பனை

சென்னை-தக்காளி, கத்தரிக்காயை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.மழை காரணமாக, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பலவகை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கிலோ 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மஹாராஷ் டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவதால், விலை குறைந்து உள்ளது.தற்போது சென்னை கோயம்பேடில், மொத்த விலையில் கிலோ தக்காளி 50 முதல் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து கத்தரிக்காயும் கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக அவரைக்காய் கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கோயம்பேடில் கழித்து கட்டப்பட்ட இரண்டாம், மூன்றாம் தர காய்கறிகளும் 100 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படுகிறது. உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
03-டிச-202101:10:54 IST Report Abuse
John Miller இவளவு விலை கொடுத்து காய்கறிகளை வாங்கி சமைக்கலாம் என்றால் மோடி ஆட்சியில் சமையல் சிலிண்டர் படம் எடுத்து ஆடும் பாம்பை போல் விலை அதிகமாகி உயிரை எடுக்கின்றது.
Rate this:
Cancel
gopalasamy N - CHENNAI,இந்தியா
02-டிச-202119:48:32 IST Report Abuse
gopalasamy N ஒட்டு போட்ட மக்கள் சந்தோசமாக உள்ளனர் அடுத்த 5 (பைவ்) ஆண்டுகள் மிக சந்தோசம்தான்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
02-டிச-202114:26:51 IST Report Abuse
Visu Iyer நூறு ருபாய் கொடுத்து பெட்ரோல் போடும் மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து கியாஸ் வாங்கும். நம்மவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விலை உயர்வு அல்ல.. இதே விலை இருந்தாலே போதும்.. இதுவே குறைவு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X